23. அல்லாஹ் மிக அழகான விஷயங்களையே (இந்த வேதத்தில்) இறக்கி இருக்கிறான். (இதிலுள்ள வசனங்களுக்கிடையில் முரண்பாடில்லாமல்)ஒன்றை மற்றொன்று ஒத்ததாகவும் (மனதில் பதிவதற்காக ஒரே விஷயத்தை) திரும்பத் திரும்பவும் கூறப்பட்டுள்ளது. எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயப்படுகிறார்களோ, (அவர்கள் அதைக் கேட்ட உடன்) அவர்களுடைய தோல்கள் சிலிர்த்து விடுகின்றன. பின்னர், அவர்களுடைய தோல்களும் உள்ளங்களும் அல்லாஹ்வுடைய வேதத்தின் பக்கம் இளகி அதன்படி செயல்படுகின்றன. இதுவே அல்லாஹ்வுடைய நேரான வழியாகும். தான் விரும்பியவர்களை இதன் மூலம் அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறான். எவனை அல்லாஹ் தவறான வழியில் விட்டு விட்டானோ அவனை நேர்வழி செலுத்தக்கூடியவன் ஒருவனுமில்லை.
الترجمة التاميلية
ٱللَّهُ نَزَّلَ أَحۡسَنَ ٱلۡحَدِيثِ كِتَٰبٗا مُّتَشَٰبِهٗا مَّثَانِيَ تَقۡشَعِرُّ مِنۡهُ جُلُودُ ٱلَّذِينَ يَخۡشَوۡنَ رَبَّهُمۡ ثُمَّ تَلِينُ جُلُودُهُمۡ وَقُلُوبُهُمۡ إِلَىٰ ذِكۡرِ ٱللَّهِۚ ذَٰلِكَ هُدَى ٱللَّهِ يَهۡدِي بِهِۦ مَن يَشَآءُۚ وَمَن يُضۡلِلِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِنۡ هَادٍ
அல்லாஹ் மிக அழகான விஷயங்களை வேதமாக இறக்கியருளினான்; (இவை முரண்பாடில்லாமல்) ஒன்றுகொன்று ஒப்பான (முதஷாபிஹ் ஆன)தாகவும், (மனதில் பதியுமாறு) திரும்பத் திரும்பக் கூறப்படுவதாகவும் இருக்கின்றன தங்கள் இறைவனுக்கு எவர்கள் அஞ்சுகிறார்களோ அவர்களுடைய தொலி(களின் உரோமக்கால்)கள் (இவற்றை கேட்கும் போது) சிலிர்த்து - விடுகின்றன. பிறகு, அவர்களுடைய தொலிகளும், இருதயங்களும் அல்லாஹ்வின் தியானத்தில் இளகுகின்றன - இதுவே அல்லாஹ்வின் நேர்வழியாகும் - இதன் மூலம், தான் நாடியவர்களை அவன் நேர்வழியில் செலுத்துகிறான். ஆனால், எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ, அவனை நேர்வழியில் நடத்துவோர் எவருமில்லை.
Jan Trust Foundation - Tamil translation
அல்லாஹ் மிக அழகிய பேச்சை -பலமுறை ஓதப்படுகின்ற, ஒன்றுக்கொன்று ஒப்பான- ஒரு வேதமாக இறக்கினான். தங்கள் இறைவனை பயப்படுபவர்களின் தோல்கள் அதை ஓதுவதன் மூலம் சிலிர்க்கின்றன. பிறகு, அவர்களின் தோல்களும் அவர்களின் உள்ளங்களும் அல்லாஹ்வின் நினைவின் பக்கம் மென்மையாகின்றன. இதுதான் அல்லாஹ்வின் நேர்வழியாகும். தான் நாடியவர்களை அவன் இதன்மூலம் நேர்வழி செலுத்துகின்றான். அல்லாஹ் எவரை வழிகெடுக்கின்றானோ அவருக்கு நேர்வழிகாட்டுபவர் (அவரை நல்வழிபடுத்துபவர்) யாரும் இல்லை.
الترجمة التاميلية - عمر شريف