47. (நபியே!) அநியாயம் செய்தவர்களுக்குப் பூமியிலுள்ள அனைத்துமே சொந்தமாக இருந்து, அத்துடன் அதைப் போன்றதொரு பாகமும் இருந்த போதிலும் மறுமையின் கொடிய வேதனையில் இருந்து அவர்கள் தப்பித்துக்கொள்ள அவை அனைத்தையுமே பரிகாரமாகக் கொடுத்து விடவே நிச்சயமாக விரும்புவார்கள். (எனினும், அது ஆகக்கூடியதல்ல) மேலும், அவர்கள் எதிர்பார்க்காததெல்லாம் அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு வெளியாகும்.
الترجمة التاميلية
وَلَوۡ أَنَّ لِلَّذِينَ ظَلَمُواْ مَا فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗا وَمِثۡلَهُۥ مَعَهُۥ لَٱفۡتَدَوۡاْ بِهِۦ مِن سُوٓءِ ٱلۡعَذَابِ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۚ وَبَدَا لَهُم مِّنَ ٱللَّهِ مَا لَمۡ يَكُونُواْ يَحۡتَسِبُونَ
மேலும், அநியாயம் செய்தவர்களிடம் பூமியிலுள்ளயாவும், அத்துடன் அது போன்றதும் இருக்குமானாலும் நிச்சயமாக கியாம நாளின் கொடிய வேதனைக்கு (அதிலிருந்து விடுதலை பெற அவையனைத்தையுமே) ஈடாகக் கொடுத்துவி(ட நா)டுவார்கள்; மேலும், அவர்கள் எண்ணிப் பார்த்திராதவையெல்லாம் அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு (வேதனையாக) வெளியாகும்.
Jan Trust Foundation - Tamil translation
நிச்சயமாக அநியாயம் செய்தவர்களுக்கு பூமியில் உள்ள அனைத்தும் அதனுடன் அது போல் இன்னமும் இருந்தால் மறுமை நாளில், கெட்ட வேதனையில் இருந்து (தப்பித்துக்கொள்ள) அதை அவர்கள் பிணையாகக் கொடுத்து (தங்களை விடுவித்து) இருப்பார்கள். இன்னும், அவர்கள் எண்ணிப் பார்த்திருக்காத விஷயங்கள் எல்லாம் அல்லாஹ்விடம் (மறுமை நாளில்) அவர்களுக்கு முன் வெளிப்படும்.
الترجمة التاميلية - عمر شريف