5. அவன், வானங்களையும் பூமியையும் உண்மையான காரணத்திற்கே படைத்திருக்கிறான். (வீணுக்காக அல்ல.) அவனே இரவைச் சுருட்டிப் பகலை விரிக்கிறான். அவனே பகலைச் சுருட்டி இரவை விரிக்கிறான். சூரியனையும், சந்திரனையும் அடக்கி வைத்திருக்கிறான். இவை ஒவ்வொன்றும், அவற்றுக்குக் (குறிப்பிட்ட எல்லைக்குள்) குறிப்பிட்ட காலப்படி நடக்கின்றன. (நபியே!) அறிந்துகொள்வீராக: நிச்சயமாக அவன் தான் அனைவரையும் மிகைத்தவன் மிக மன்னிப்பவன்.
الترجمة التاميلية
خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ بِٱلۡحَقِّۖ يُكَوِّرُ ٱلَّيۡلَ عَلَى ٱلنَّهَارِ وَيُكَوِّرُ ٱلنَّهَارَ عَلَى ٱلَّيۡلِۖ وَسَخَّرَ ٱلشَّمۡسَ وَٱلۡقَمَرَۖ كُلّٞ يَجۡرِي لِأَجَلٖ مُّسَمًّىۗ أَلَا هُوَ ٱلۡعَزِيزُ ٱلۡغَفَّـٰرُ
அவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்திருக்கிறான்; அவனே பகலின் மீது இரவைச் சுற்றுகிறான்; இன்னும் இரவின் மீது பகலைச் சுற்றுகிறான்; சூரியனையும் சந்திரனையும் (தன் ஆதிக்கத்திற்குள்) வசப்படுத்தினான், இவை ஒவ்வொன்றும் குறிப்பிடட தவணைப் பிரகாரம் நடக்கின்றது; (நபியே!) அறிந்து கொள்வீராக! அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னப்பவன்.
Jan Trust Foundation - Tamil translation
அவன் வானங்களை, பூமியை உண்மையான காரணத்திற்காக படைத்தான். பகல் மீது இரவை சுருட்டுகின்றான். இரவின் மீது பகலை சுருட்டுகின்றான். சூரியனை சந்திரனை அவன் கட்டுப்படுத்தி வைத்துள்ளான். எல்லாம் குறிப்பிட்ட ஒரு தவணையை நோக்கி ஓடுகின்றன. அறிந்துகொள்ளுங்கள்! அவன்தான் மிகைத்தவன், மகா மன்னிப்பாளன்.
الترجمة التاميلية - عمر شريف