58. அல்லது, (உங்களில் எவரும்) வேதனையைக் (கண்ணால்) கண்ட சமயத்தில் ‘‘(இவ்வுலகத்திற்கு) நான் திரும்பிச் செல்ல வழி உண்டா? அவ்வாறாயின் நான் நல்லவர்களில் ஆகிவிடுவேன்'' என்று கூறாமல் இருப்பதற்காகவும் (உங்கள் இறைவன் பக்கம் திரும்பி, அவன் இறக்கிய வேதத்தை பின்பற்றுங்கள்).
الترجمة التاميلية
أَوۡ تَقُولَ حِينَ تَرَى ٱلۡعَذَابَ لَوۡ أَنَّ لِي كَرَّةٗ فَأَكُونَ مِنَ ٱلۡمُحۡسِنِينَ
அல்லது வேதனையைக் கண்ட சமயத்தில், "(உலகத்திற்கு) நான் மீண்டு செல்ல வழி உண்டாகுமாயின், (அழகிய) நன்மை செய்வோரில் ஒருவனாக நானும் ஆகிவிடுவேன்!" என்று கூறாமல் இருப்பதற்காகவும்;
Jan Trust Foundation - Tamil translation
அல்லது அது (-அந்த ஆன்மா) வேதனையை கண்ணால் பார்க்கும் நேரத்தில் நிச்சயமாக எனக்கு (உலகத்திற்கு) திரும்பி வரமுடிந்தால் நானும் நல்லவர்களில் ஆகிவிடுவேன் என்று (எந்த ஓர் ஆன்மாவும்) சொல்லாமல் இருப்பதற்காக (இந்த உலகத்தில் நீங்கள் வாழும் போதே அவனுக்கு கீழ்ப்படிந்து விடுங்கள்!)
الترجمة التاميلية - عمر شريف