9. எவன் மறுமையை பயந்து, தன் இறைவனின் அருளை எதிர்பார்த்து, இரவு காலங்களில் நின்றவனாகவும், சிரம் பணிந்தவனாகவும் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருப்பவனா (நம்பிக்கை கொள்ளாது நிராகரிப்பவனைப் போலாவான்)? (நபியே!) நீர் கேட்பீராக: கல்வி அறிவுடையவரும், கல்வி அறிவில்லாதவரும் சமமாவார்களா? (இந்த குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுபவர்கள் எல்லாம் (கல்வி) அறிவுடையவர்தான்.
الترجمة التاميلية
أَمَّنۡ هُوَ قَٰنِتٌ ءَانَآءَ ٱلَّيۡلِ سَاجِدٗا وَقَآئِمٗا يَحۡذَرُ ٱلۡأٓخِرَةَ وَيَرۡجُواْ رَحۡمَةَ رَبِّهِۦۗ قُلۡ هَلۡ يَسۡتَوِي ٱلَّذِينَ يَعۡلَمُونَ وَٱلَّذِينَ لَا يَعۡلَمُونَۗ إِنَّمَا يَتَذَكَّرُ أُوْلُواْ ٱلۡأَلۡبَٰبِ
எவர் மறுமையை அஞ்சி தன் இறைவனுடைய ரஹ்மத்தை ஆதரவு வைத்து இராக்காலங்களில் ஸுஜூது செய்தவராகவும், நிலையில் நின்றவராகவும் வணங்குகிறாரோ அவர் (நிராகரிப்பவரைப் போல்) ஆவாரா? (நபியே!) நீர் கூறும்; "அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நிச்சயமாக (இக் குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையவர்கள் தாம்."
Jan Trust Foundation - Tamil translation
மறுமையை பயந்து, தன் இறைவனின் அருளை ஆதரவு வைத்து, இரவு நேரங்களில் சிரம் பணிந்தவராகவும் நின்றவராகவும் அல்லாஹ்வை வணங்கக்கூடியவர் அல்லாஹ்வை நிராகரிப்பவருக்கு சமமாவாரா? (நபியே!) கூறுவீராக! (அல்லாஹ்வை வணங்கி அவனுக்கு கீழ்ப்படிவதில் உள்ள நன்மையை) அறிந்தவர்களும் (அதை) அறியாதவர்களும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவதெல்லாம் அறிவுள்ளவர்கள்தான்.
الترجمة التاميلية - عمر شريف