143. இவர்கள் (நிராகரிப்பவர்களாகிய) அவர்களுடனுமில்லை. (வஞ்சகர்களாகிய) இவர்களுடனுமில்லை. மத்தியில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். எவர்களை அல்லாஹ் வழிதவறவிட்டு விட்டானோ அவர்களுக்கு நீர் ஒரு வழியையும் காணமாட்டீர்.
الترجمة التاميلية
مُّذَبۡذَبِينَ بَيۡنَ ذَٰلِكَ لَآ إِلَىٰ هَـٰٓؤُلَآءِ وَلَآ إِلَىٰ هَـٰٓؤُلَآءِۚ وَمَن يُضۡلِلِ ٱللَّهُ فَلَن تَجِدَ لَهُۥ سَبِيلٗا
இந்த முனாஃபிக்குகள் முஃமின்களின் பக்கமுமில்லை, காஃபிர்களின் பக்கமுமில்லை. இரு பிரிவினர்களுக்கிடையே தத்தளிதுக் கொண்டிருக்கிறார்கள்;. அல்லாஹ் எவரை வழி தவறச் செய்துவிட்டானோ, அவருக்கு (நபியே!) யாதொரு வழியையும் நீர் காணமாட்டீர்.
Jan Trust Foundation - Tamil translation
அதற்கிடையில் தடுமாறியவர்களாக இருக்கின்றனர். (முஸ்லிம்களாகிய) இவர்களுடனும் இல்லை, (காபிர்களாகிய) இவர்களுடனுமில்லை. எவரை அல்லாஹ் வழிகெடுப்பானோ அவருக்கு ஒரு (நல்ல) வழியையும் (நீர்) அறவே பெறமாட்டீர்.
الترجمة التاميلية - عمر شريف