40. நிச்சயமாக எவர்கள் நம் வசனங்களில் தப்பர்த்தங்களை(த் தங்கள் தீய செயல்களுக்கு ஆதாரமாக)க் கற்பிக்கிறார்களோ, அவர்களுடைய செயல்களில் (ஒன்றுமே) நிச்சயமாக நமக்குமறைந்து விடாது. மறுமையில் நரகத்தில் எறியப்படுபவன் நல்லவனா? அல்லது பயமற்றவனாக(ச் சொர்க்கத்திற்கு) வருபவன் மேலானவனா? (மனிதர்களே!) நீங்கள் விரும்பியதைச் செய்து கொண்டிருங்கள். நீங்கள் செய்பவற்றை நிச்சயமாக அவன் உற்று நோக்குகிறான்.
الترجمة التاميلية
إِنَّ ٱلَّذِينَ يُلۡحِدُونَ فِيٓ ءَايَٰتِنَا لَا يَخۡفَوۡنَ عَلَيۡنَآۗ أَفَمَن يُلۡقَىٰ فِي ٱلنَّارِ خَيۡرٌ أَم مَّن يَأۡتِيٓ ءَامِنٗا يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۚ ٱعۡمَلُواْ مَا شِئۡتُمۡ إِنَّهُۥ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٌ
நிச்சயமாக எவர்கள் நம்முடைய வசனங்களில் குறை காண்கிறார்களோ அவர்(களுடைய செயல்)கள் நமக்கு மறைக்கப்படவில்லை - ஆகவே, நரகத்தில் எறியப்படுபவன் நல்லவனா? அல்லது கியாம நாளன்று அச்சம் தீர்ந்து வருப(வன் நல்ல)வனா? நீங்கள் விரும்பதைச் செய்து கொண்டிருங்கள் - நிச்சயமாக அவன் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவனாகவே இருக்கிறான்.
Jan Trust Foundation - Tamil translation
நிச்சயமாக நமது வசனங்களில் (சத்தியத்தை விட்டு) தடம் புரளுபவர்கள் நம்மீது மறைந்துவிட மாட்டார்கள். நரகத்தில் போடப்படுபவர் சிறந்தவரா அல்லது மறுமை நாளில் நிம்மதி பெற்றவராக வருகின்றவரா? நீங்கள் (விரும்பி) நாடியதை செய்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அவன் நீங்கள் செய்வதை உற்று நோக்குபவன் ஆவான்.
الترجمة التاميلية - عمر شريف