37. மேலும், அவருடைய விருந்தாளியையும் (கெட்ட காரியத்திற்காக) மயக்கி (அடித்து)க்கொண்டு போகப் பார்த்தார்கள். ஆகவே, அவர்களுடைய கண்களை நாம் துடைத்து(க் குருடாக்கி) விட்டோம். எனது வேதனையையும், எனது எச்சரிக்கைகளையும் சுவைத்துப்பாருங்கள் என்று கூறினோம்.
الترجمة التاميلية
وَلَقَدۡ رَٰوَدُوهُ عَن ضَيۡفِهِۦ فَطَمَسۡنَآ أَعۡيُنَهُمۡ فَذُوقُواْ عَذَابِي وَنُذُرِ
அன்றியும் அவருடைய விருந்தினரை (துர்ச் செயலுக்காக)க் கொண்டு போகப் பார்த்தார்கள், ஆனால் நாம் அவர்களுடைய கண்களைப் போக்கினோம். "என்(னால் உண்டாகும்) வேதனையையும், எச்சரிக்கைகளையும் சுவைத்துப் பாருங்கள்" (என்றும் கூறினோம்).
Jan Trust Foundation - Tamil translation
திட்டவட்டமாக அவர்கள் அவரிடம் அவரது விருந்தினர்களை வேண்டி (விருந்தினர்களிடம் தங்கள் ஆசையை தனித்துக் கொள்ள) அடம்பிடித்தனர். நாம் அவர்களின் கண்களை (அழித்து முகத்தோடு முகமாக) சமமாக்கி விட்டோம். ஆகவே, என் தண்டனையையும் என் எச்சரிக்கையையும் சுவையுங்கள்.
الترجمة التاميلية - عمر شريف