9. (இவ்வாறே) இவர்களுக்கு முன்னிருந்த நூஹுடைய மக்களும் (அந்த நாளைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள். ஆகவே, அவர்கள் (அதைப் பற்றி எச்சரிக்கை செய்த) நம் (தூதராகிய) அடியாரைப் பொய்யாக்கியதுடன், அவரைப் பைத்தியக்காரனென்று கூறி (அவரை துன்புறுத்துவதாக) மிரட்டிக்கொண்டும் இருந்தார்கள்.
الترجمة التاميلية
۞كَذَّبَتۡ قَبۡلَهُمۡ قَوۡمُ نُوحٖ فَكَذَّبُواْ عَبۡدَنَا وَقَالُواْ مَجۡنُونٞ وَٱزۡدُجِرَ
இவர்களுக்கு முன்னர் நூஹின் சமூகத்தினர் (மறுமையைப்) பொய்யாக்கினர், ஆகவே அவர்கள் நம் அடியாரைப் பொய்ப்பித்து (அவரைப்) 'பைத்தியக்காரர்' என்று கூறினர், அவர் விரட்டவும் பட்டார்.
Jan Trust Foundation - Tamil translation
இவர்களுக்கு முன்னர் நூஹுடைய மக்கள் பொய்ப்பித்தனர். ஆக, அவர்கள் நமது அடியாரை பொய்ப்பித்தனர். (அது மட்டுமா!) அவர் ஒரு பைத்தியக்காரர் என்று(ம்) கூறினர். இன்னும் அவர் (அவர்களால் கடுமையாக) எச்சரிக்கப்பட்டார்.
الترجمة التاميلية - عمر شريف