ترجمة سورة الجن

الترجمة التاميلية - عمر شريف
ترجمة معاني سورة الجن باللغة التاميلية من كتاب الترجمة التاميلية - عمر شريف .

போர்வை போர்த்தியவரே!
அது நேர்வழிக்கு வழிகாட்டுகிறது. ஆகவே, நாங்கள் அதை நம்பிக்கை கொண்டோம்; எங்கள் இறைவனுக்கு ஒருவரையும் நாங்கள் இணையாக்க மாட்டோம்.
நிச்சயமாக செய்தியாவது, எங்கள் இறைவனின் மதிப்பு மிக உயர்ந்தது. அவன் மனைவியையும் பிள்ளைகளையும் (தனக்கு) எடுத்துக் கொள்ளவில்லை.
நிச்சயமாக செய்தியாவது, எங்களில் உள்ள மூடன் அல்லாஹ்வின் மீது அநியாயமான (உண்மைக்கு புறம்பான) விஷயத்தை கூறுபவனாக இருந்தான்.
“மனிதர்களும் ஜின்களும் அல்லாஹ்வின் மீது பொய் சொல்ல மாட்டார்கள்”என்று நிச்சயமாக நாங்கள் நம்பினோம்.
நிச்சயமாக மனிதர்களில் உள்ள ஆண்கள் சிலர் ஜின்களில் உள்ள ஆண்கள் சிலரிடம் பாதுகாவல் தேடினர். எனவே அவர்கள் (-ஜின் ஆண்கள்) அவர்களுக்கு (மனித ஆண்களுக்கு) பயத்தை (திகிலை) அதிகப்படுத்தினர்.
நிச்சயமாக அவர்கள் (ஜின்களில் உள்ள நிராகரிப்பாளர்கள்) நீங்கள் (-மனிதர்களில் உள்ள நிராகரிப்பாளர்கள்) எண்ணுவது போன்றுதான் அல்லாஹ் ஒருவரையும் (அவர் மரணித்த பின்னர் மறுமையில்) அறவே எழுப்ப மாட்டான் என்று எண்ணினர்.
நிச்சயமாக நாங்கள் வானத்தை (தொட)த் தேடினோம். அது கடுமையான காவல்களாலும் எரி நட்சத்திரங்களாலும் நிரப்பப்பட்டிருப்பதாக அதை நாங்கள் கண்டோம்.
நிச்சயமாக நாங்கள் அதில் (-வானத்தில்) பல இடங்களில் (வானவர்கள் பேசுகின்ற செய்தியை) ஒட்டுக்கேட்க உட்காருபவர்களாக இருந்தோம். இப்போது யார் ஒட்டுக் கேட்பாரோ அவர் தனக்கு (தன்னை எரிக்க) எதிர்பார்த்திருக்கின்ற எரி நட்சத்திரத்தை காண்பார்.
நிச்சயமாக நாங்கள் அறியமாட்டோம், “பூமியில் உள்ளவர்களுக்கு தீமை ஏதும் நாடப்பட்டதா? அல்லது அவர்களின் இறைவன் அவர்களுக்கு நேர்வழியை நாடினானா?” என்று.
நிச்சயமாக எங்களில் நல்லவர்களும் உள்ளனர். இன்னும் எங்களில் மற்றவர்களும் உள்ளனர். நாங்கள் பலதரப்பட்ட பிரிவுகளாக இருந்தோம்.
நிச்சயமாக நாங்கள் அறிந்தோம், “நாங்கள் பூமியில் அல்லாஹ்வை இயலாமல் அறவே ஆக்கிவிட முடியாது, இன்னும் நாங்கள் (அவனை விட்டும்) ஓடி (ஒளிந்து) அவனை இயலாமல் ஆக்கிவிட முடியாது (அவனை விட்டும் தப்பிக்க முடியாது).” என்று.
நிச்சயமாக நாங்கள் நேர்வழியை செவியுற்ற போது நாங்கள் அதை நம்பிக்கை கொண்டோம். எவர் தன் இறைவனை நம்பிக்கை கொள்வாரோ அவர் (தனது நன்மைக்குரிய கூலி) குறைவதையும் (தான் செய்யாத குற்றத்தை தன் மீது சுமத்தப்படுகின்ற) அநியாயத்தையும் அவர் பயப்படமாட்டார்.
நிச்சயமாக நாங்கள் எங்களில் முஸ்லிம்களும் உள்ளனர். எங்களில் (அல்லாஹ்வை நிராகரிக்கின்ற) அநியாயக்காரர்களும் உள்ளனர். யார் இஸ்லாமை ஏற்றாரோ அவர்கள்தான் நேர்வழியை நன்கு (ஆராய்ந்து) தேடினார்கள்.
ஆக, அநியாயக்காரர்கள் நரகத்தின் எரி கொல்லிகளாக இருக்கின்றனர்.
அவர்கள் நேரான (இஸ்லாமிய) மார்க்கத்தில் நிலையாக இருந்திருந்தால் நாம் அவர்களுக்கு (தேவையான) பலன்தரக்கூடிய அதிகமான நீரை (-அதிகமான செல்வத்தை) நாம் புகட்டி (-கொடுத்து) இருப்போம்.
(அவர்கள் நமக்கு நன்றி செலுத்துகின்றார்களா என்று) அதன்மூலம் அவர்களை நாம் சோதிப்பதற்காக. எவர் தன் இறைவனின் அறிவுரையை புறக்கணிப்பாரோ அவரை கடினமான தண்டனையில் அவன் புகுத்துவான்.
நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்விற்கு உரியன. ஆகவே, அல்லாஹ்வுடன் வேறு ஒருவரை அழைக்காதீர்கள் (-வணங்காதீர்கள்)!
நிச்சயமாக செய்தி, அல்லாஹ்வின் அடியார் (முஹம்மது) அவனை அழைப்பதற்காக நின்ற போது அவர்கள் (-அரபுகள்) எல்லோரும் சேர்ந்து அவருக்கு எதிராக ஆகிவிட முயற்சித்தனர்.
(நபியே!) கூறுவீராக! நான் அழைப்பதெல்லாம் (-வணங்குவதெல்லாம்) என் இறைவனை (மட்டும்)தான். ஒருவரையும் அவனுக்கு நான் இணையாக்க மாட்டேன்.
(நபியே!) கூறுவீராக! நிச்சயமாக நான் உங்களின் கெட்டதற்கும் நல்லதற்கும் உரிமை பெறமாட்டேன்.
(நபியே!) கூறுவீராக! நிச்சயமாக நான் (அவனுக்கு மாறுசெய்தால்) என்னை அல்லாஹ்விடமிருந்து அறவே ஒருவரும் காப்பாற்ற மாட்டார். அவனை அன்றி நான் (வேறு ஓர்) ஒதுங்குமிடத்தை (எனக்கு) அறவே காணமாட்டேன்.
(எனினும்,) அல்லாஹ்விடமிருந்து (செய்திகளை) எடுத்துரைப்பதற்கும் அவனுடைய தூதுத்துவ செய்திகளுக்கும் தவிர (வேறு எதற்கும் நான் உரிமை பெற மாட்டேன்). எவர் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் மாறு செய்வாரோ நிச்சயமாக அவருக்கு நரக நெருப்புதான் உண்டு. அதில் அவர்கள் எப்போதும் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.
இறுதியாக, அவர்கள் தாங்கள் எச்சரிக்கப்பட்டதை (கண்கூடாக) பார்த்தால் அவர்கள் அறி(ந்து கொள்)வார்கள், எவர் உதவியாளரால் மிக பலவீனமானவர், எண்ணிக்கையால் மிக குறைவானவர் என்று.
(நபியே!) கூறுவீராக! நீங்கள் எச்சரிக்கப்படுவது சமீபமாக உள்ளதா அல்லது அதற்கு என் இறைவன் ஒரு அவகாசத்தை ஆக்கி இருக்கின்றானா? என்று நான் அறியமாட்டேன்.
(அவன்தான்) மறைவான ஞானங்களை நன்கறிந்தவன். அவன் தன் மறைவான ஞானங்களை ஒருவருக்கும் வெளிப்படுத்த மாட்டான்.
(எனினும்,) அவன் (தனது) தூதர்களில் எவர்களை திருப்திகொண்டானோ அவர்களைத் தவிர. (அவர்களுக்கு மட்டும் தன் ஞானத்தில் சிலவற்றை வெளிப்படுத்துவான்.) நிச்சயமாக அவன் அவர்களுக்கு முன்னும் அவர்களுக்குப் பின்னும் பாதுகாவலர்களை அனுப்புவான்.
அவர்கள் (-முந்திய தூதர்கள் எல்லோரும்) தங்கள் இறைவனின் தூதுத்துவ செய்திகளை திட்டமாக எடுத்துரைத்தார்கள் என்று அவர் (-முஹம்மது நபி) அறிவதற்காக (அவன் தூதர்களுக்கு முன்னும் பின்னும் பாதுகாவலர்களை அனுப்பி வைத்தான்). இன்னும், அவன் அவர்களிடம் உள்ளவற்றை சூழ்ந்து அறிவான். இன்னும் எல்லா பொருள்களையும் அவன் எண்ணிக்கையால் (அவை என்னென்ன, எத்தனை என துல்லியமாக) கணக்கிட்டுள்ளான்.
Icon