62. (நபியே!) அவர்களின் கரங்கள் தேடிக்கொண்ட (தீய) செயலின் காரணமாக அவர்களுக்கு ஒரு கஷ்டம் ஏற்பட்ட சமயத்தில் (அதற்குப் பரிகாரம் தேடிக்கொள்ள முடியாமலாகிவிட்ட அவர்களின் இழிநிலைமை) எவ்வாறு இருந்தது (என்பதை நீர் கவனிப்பீராக)! பின்னர், அவர்கள் உம்மிடமே வந்து ‘‘(அந்த ஷைத்தானிடம் நாங்கள் சென்றதெல்லாம்) நன்மையையும் ஒற்றுமையையும் விரும்பியே தவிர, வேறொன்றையும் நாங்கள் விரும்பவில்லை'' என்று அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்கின்றனர்.
الترجمة التاميلية
فَكَيۡفَ إِذَآ أَصَٰبَتۡهُم مُّصِيبَةُۢ بِمَا قَدَّمَتۡ أَيۡدِيهِمۡ ثُمَّ جَآءُوكَ يَحۡلِفُونَ بِٱللَّهِ إِنۡ أَرَدۡنَآ إِلَّآ إِحۡسَٰنٗا وَتَوۡفِيقًا
அவர்களின் கைகள் முற்படுத்தியனுப்பிய தீவினையின் காரணத்தால், அவர்களுக்குத் துன்பம் ஏற்பட்டால் எப்படியிருக்கும்? அப்பொழுது அவர்கள் உம்மிடம் வந்து அல்லாஹ்வின் மேல் சத்தியம் செய்து "நாங்கள் நன்மையையும் ஒற்றுமையையும் தவிர (வேறெதனையும்) நாடவில்லை" என்று கூறுகின்றனர்.
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) (தீமைகளில்) அவர்களின் கரங்கள் முற்படுத்தியவற்றிலின் காரணமாக அவர்களுக்கு ஒரு கஷ்டம் ஏற்பட்டால் (அதற்குப் பரிகாரம் தேடிக் கொள்ள முடியாமல்போன அவர்களின் இழி நிலைமை) எவ்வாறு இருந்தது (என்பதை நீர் கவனிப்பீராக.) பிறகு அவர்கள் உம்மிடம் வந்து "(அந்த தீயவனிடம் நாங்கள் சென்றதெல்லாம்) நன்மையையும் ஒற்றுமையையும் அன்றி, (வேறொன்றையும்) நாங்கள் நாடவில்லை'' என்று அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்கின்றனர்.
الترجمة التاميلية - عمر شريف