70. இவர்களுக்கு முன்னிருந்த நூஹ் (நபி) உடைய மக்களின் சரித்திரமும், ஆத், ஸமூத் (என்பவர்களின்) சரித்திரமும், இப்றாஹீம் (நபி) உடைய மக்களின் சரித்திரமும், மத்யன் (என்னும்) ஊராரின் சரித்திரமும், தலைகீழாகப் புரண்டுபோன ஊர்களின் சரித்திரங்களும் அவர்களுக்குக் கிடைக்கவில்லையா? (நம்மால் அனுப்பப்பட்ட) அவர்களுடைய தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைத்தான் அவர்களிடம் கொண்டு வந்தார்கள். (அவ்வாறிருந்தும் அந்த தூதர்களை அவர்கள் நிராகரித்ததன் காரணமாக அவர்கள் அனைவரும் அழிந்துவிட்டனர். இதில்) அல்லாஹ் அவர்களுக்கு (ஒரு) தீங்கும் இழைத்து விடவில்லை. எனினும், அவர்கள் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்(டு அழிந்து விட்)டனர்.
الترجمة التاميلية
أَلَمۡ يَأۡتِهِمۡ نَبَأُ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ قَوۡمِ نُوحٖ وَعَادٖ وَثَمُودَ وَقَوۡمِ إِبۡرَٰهِيمَ وَأَصۡحَٰبِ مَدۡيَنَ وَٱلۡمُؤۡتَفِكَٰتِۚ أَتَتۡهُمۡ رُسُلُهُم بِٱلۡبَيِّنَٰتِۖ فَمَا كَانَ ٱللَّهُ لِيَظۡلِمَهُمۡ وَلَٰكِن كَانُوٓاْ أَنفُسَهُمۡ يَظۡلِمُونَ
இவர்களுக்கு முன்னிருந்த நூஹ்வுடைய சமுதாயம், ஆது, ஸமூதுடைய சமுதாயம் இப்றாஹீம் உடைய சமுதாயம் மத்யன் வாசிகள், தலைகீழாய்ப் புரண்டுபோன ஊரார் ஆகியவர்களின் வரலாறு அவர்களிடம் வரவில்லையா? அவர்களுக்கு (நாம் அனுப்பிய) அவர்களுக்குரிய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளை கொண்டு வந்தார்கள்; (தூதர்களை நிராகரித்ததினால் அவர்கள் அழிந்தனர்.) அல்லாஹ் அவர்களுக்கு ஒரு தீங்கும் இழைக்கவில்லை எனினும் அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.
Jan Trust Foundation - Tamil translation
இவர்களுக்கு முன்னருள்ள நூஹ் (நபி) உடைய சமுதாயம், ஆது, ஸமூது, இப்றாஹீம் (நபி) உடைய சமுதாயம், மத்யன் வாசிகள், தலைகீழாகப் புரட்டப்பட்ட ஊர்கள் ஆகியோரின் சரித்திரம் அவர்களுக்கு வரவில்லையா? அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள். அல்லாஹ் அவர்களுக்கு அநீதியிழைப்பவனாக இருக்கவில்லை. எனினும், அவர்கள் தங்களுக்கே அநீதியிழைப்பவர்களாக இருந்தனர்.
الترجمة التاميلية - عمر شريف