74. (நம்பிக்கையாளர்களே! நயவஞ்சகர்களாகிய) இவர்கள் நிராகரிப்பான வார்த்தையை மெய்யாகவே கூறியிருந்தும் (அதைத்) தாங்கள் கூறவே இல்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றனர். மேலும், இவர்கள் இஸ்லாமில் சேர்ந்த பின்னர் (அதை) நிராகரித்தும் இருக்கின்றனர். (அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைக்கக் கருதி) தங்களால் சாத்தியப்படாமல் போனதொரு காரியத்தைச் செய்யவும் அவர்கள் முயற்சித்தனர். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும், தங்கள் அருளைக் கொண்டு இவர்களை சீமான்களாக ஆக்கியதற்காகவா (முஸ்லிம்களாகிய உங்களை) அவர்கள் வெறுக்கின்றனர். இனியேனும் அவர்கள் கைசேதப்பட்டு இறைவனிடம் மன்னிப்புக் கோரி விலகிக் கொண்டால் (அது) அவர்களுக்கே நன்மையாகும். மேலும், அவர்கள் புறக்கணித்தாலோ இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ் அவர்களை மிகத் துன்புறுத்தும் வேதனையால் வேதனை செய்வான். அவர்களை பாதுகாப்பவர்களோ உதவி செய்பவர்களோ இவ்வுலகில் (ஒருவரும்) இல்லை.
الترجمة التاميلية
يَحۡلِفُونَ بِٱللَّهِ مَا قَالُواْ وَلَقَدۡ قَالُواْ كَلِمَةَ ٱلۡكُفۡرِ وَكَفَرُواْ بَعۡدَ إِسۡلَٰمِهِمۡ وَهَمُّواْ بِمَا لَمۡ يَنَالُواْۚ وَمَا نَقَمُوٓاْ إِلَّآ أَنۡ أَغۡنَىٰهُمُ ٱللَّهُ وَرَسُولُهُۥ مِن فَضۡلِهِۦۚ فَإِن يَتُوبُواْ يَكُ خَيۡرٗا لَّهُمۡۖ وَإِن يَتَوَلَّوۡاْ يُعَذِّبۡهُمُ ٱللَّهُ عَذَابًا أَلِيمٗا فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِۚ وَمَا لَهُمۡ فِي ٱلۡأَرۡضِ مِن وَلِيّٖ وَلَا نَصِيرٖ
இவர்கள் நிச்சமயாக 'குஃப்ருடைய' சொல்லைச் சொல்லிவிட்டு அதைச் சொல்லவே இல்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறார்கள்; அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொண்டபின் நிராகரித்தும் இருக்கின்றனர், (அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைக்கக் கருதித்) தங்களால் அடைய முடியாததையும் (அடைந்துவிட) முயன்றனர்; அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவனுடைய அருட்கொடையினால் அவர்களைச் சீமான்களாக்கியதற்காகவா (இவ்வாறு) பழிவாங்க முற்பட்டனர்? எனவே அவர்கள் (தம் தவறிலிருந்து) மீள்வார்களானால், அவர்களுக்கு நன்மையாக இருக்கும்; ஆனால் அவர்கள் புறக்கணித்தால், அல்லாஹ் அவர்களை நோவினை மிக்க வேதனை கொண்டு இம்மையிலும், மறுமையிலும் வேதனை செய்வான்; அவர்களுக்குப் பாதுகாவலனோ, உதவியாளனோ இவ்வுலகில் எவரும் இல்லை.
Jan Trust Foundation - Tamil translation
(நயவஞ்சகர்கள்) தாங்கள் (தூதருக்கு எதிராக ஏதும்) கூறவில்லை என்று அல்லாஹ் மீது சத்தியமிடுன்றனர். நிராகரிப்பின் வார்த்தையை அவர்கள் கூறியிருக்கின்றனர். அவர்கள் முஸ்லிமானதற்குப் பின்னர் நிராகரித்தனர். அவர்கள் அடைய முடியாததை (செய்ய) திட்டமிட்டனர். (அதாவது தூதரை கொல்வதற்கு முயற்சித்தனர்.) அல்லாஹ் தன் அருளினால், இன்னும் அவனுடைய தூதர் (தனது தர்மத்தினால்) இவர்களுக்கு (செல்வத்தை வழங்கி) நிறைவாக்கினார்கள் என்பதற்கே தவிர (வேறு எதற்காகவும்) இவர்கள் (தூதரை) தண்டிக்க (நாட)வில்லை. (அதாவது அல்லாஹ் இன்னும் அவனுடைய தூதரின் உபகாரத்திற்கு நன்றியுள்ளவர்களாக இருப்பதற்குப் பதிலாக நன்றிகெட்டதனமாக தூதரையே கொல்ல நாடினர் நயவஞ்சகர்கள்.) அவர்கள் திருந்தினால் அது அவர்களுக்கே சிறந்ததாக இருக்கும். அவர்கள் (திருந்தாமல்) விலகிச் சென்றால் இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ் அவர்களை துன்புறுத்தக்கூடிய வேதனையால் வேதனை செய்வான். பூமியில் அவர்களுக்கு (எந்த) ஒரு பாதுகாவலரும் இல்லை, எந்த ஓர் உதவியாளரும் இல்லை.
الترجمة التاميلية - عمر شريف