ترجمة سورة الأعلى

الترجمة التاميلية
ترجمة معاني سورة الأعلى باللغة التاميلية من كتاب الترجمة التاميلية .
من تأليف: عبد الحميد الباقوي .

1. (நபியே!) மிக மேலான உமது இறைவனின் திருப்பெயரை நீர் புகழ்ந்து துதி செய்வீராக;
2. அவனே (எல்லா படைப்புகளையும்) படைத்து, (அவற்றை) ஒழுங்குபடுத்தியவன்.
3. அவனே (அவற்றுக்கு வேண்டிய சகலவற்றையும்) நிர்ணயம் செய்து, (அவற்றை அடையக் கூடிய) வழிகளையும் (அவற்றுக்கு) அறிவித்தான்.
4. அவனே (கால்நடைகளுக்கு) மேய்ச்சல் பொருள்களையும் வெளிப்படுத்துகிறான்.
5. பின்னர் அவற்றை உலர்ந்த சருகுகளாக ஆக்குகிறான்.
6, 7. (நபியே! இந்த குர்ஆனை) நாம் உமக்கு ஓதக் கற்பிப்போம். அல்லாஹ் நாடினாலே தவிர, (அதில் எதையும்) நீர் மறக்க மாட்டீர். நிச்சயமாக அவன் மறைந்திருப்பவற்றையும் வெளிப்படையானதையும் நன்கறிகிறான்.
6, 7. (நபியே! இந்த குர்ஆனை) நாம் உமக்கு ஓதக் கற்பிப்போம். அல்லாஹ் நாடினாலே தவிர, (அதில் எதையும்) நீர் மறக்க மாட்டீர். நிச்சயமாக அவன் மறைந்திருப்பவற்றையும் வெளிப்படையானதையும் நன்கறிகிறான்.
8. சொர்க்கப் பாதையை நாம் உமக்கு எளிதாக்கித் தருவோம்.
9. ஆகவே, நல்லுபதேசம் (மக்களுக்குப்) பயனளிக்கின்ற வரை நீர் உபதேசித்துக் கொண்டே வருவீராக.
10. நிச்சயமாக எவர் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறாரோ அவர், (இதைக் கொண்டு) நல்லறிவை அடைவார்.
11. துர்ப்பாக்கியமுடையவனோ, இதிலிருந்து விலகிக்கொள்வான்.
12. (எனினும்,) அவன் (நரகத்தின்) பெரிய நெருப்பை அடைவான்.
13. பின்னர், அதில் அவன் மரணிக்கவுமாட்டான்; (சுகமாக) வாழவும் மாட்டான்.
14. எவர் (பாவங்களை விட்டு விலகிப்) பரிசுத்தவானாக ஆனாரோ அவர், நிச்சயமாக வெற்றி பெற்றார்.
15. அவன் தன் இறைவனின் திருப்பெயரை நினைவு செய்து கொண்டும், தொழுது கொண்டுமிருப்பார்.
16. எனினும், நீங்களோ (மறுமையை விட்டுவிட்டு) இவ்வுலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்.
17. மறுமையின் வாழ்க்கைதான் மிக்க மேலானதும் நிலையானதுமாகும்.
18. நிச்சயமாக இது முன்னுள்ள வேதங்களிலும்,
19. இப்ராஹீம், மூஸாவுடைய வேதங்களிலும் இருக்கிறது.
Icon