28. (விசாரணைக்காக) அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று சேர்க்கும் நாளில் அவர்களில் இணைவைத்து வணங்கியவர்களை நோக்கி ‘‘நீங்களும் நீங்கள் இணைவைத்து வணங்கிய தெய்வங்களும் சிறிது இங்கு தாமதியுங்கள்'' என்று கூறி அவர்களுக்கிடையில் இருந்த தொடர்பை நீக்கி விடுவோம். அச்சமயம் அவர்களுடைய தெய்வங்கள் (என்று கற்பனையாக அவர்கள் வணங்கி வந்தவை) அவர்களை நோக்கி ‘‘நீங்கள் எங்களை வணங்கவே இல்லை'' என்றும்,
الترجمة التاميلية
وَيَوۡمَ نَحۡشُرُهُمۡ جَمِيعٗا ثُمَّ نَقُولُ لِلَّذِينَ أَشۡرَكُواْ مَكَانَكُمۡ أَنتُمۡ وَشُرَكَآؤُكُمۡۚ فَزَيَّلۡنَا بَيۡنَهُمۡۖ وَقَالَ شُرَكَآؤُهُم مَّا كُنتُمۡ إِيَّانَا تَعۡبُدُونَ
(இன்னும் - விசாரணைக்காக) நாம் அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் நாளில் இணைவைத்தவர்களை நோக்கி; "நீங்களும், நீங்கள் இணைவைத்து வணங்கியவையும் உங்கள் இடத்திலேயே (சிறிது தாமதித்து) இருங்கள்" என்று சொல்வோம்; பின்பு அவர்களிடையேயிருந்த தொடர்பை நீக்கிவிடுவோம் - அப்போது அவர்களால் இணைவைக்கப்பட்டவைகள்" நீங்கள் எங்களை வணங்கவேயில்லை" என்று கூறிவிடும்.
Jan Trust Foundation - Tamil translation
அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று சேர்க்கும் நாளில்... பிறகு, இணை வைத்தவர்களை நோக்கி “நீங்களும் உங்கள் இணை(தெய்வங்)களும் உங்கள் இடத்திலேயே (தாமதியுங்கள்)” என்று கூறுவோம். அவர்களுக்கிடையில் (தொடர்பை) நீக்கி விடுவோம். (அப்போது) “நீங்கள் எங்களை வணங்கி கொண்டிருக்கவில்லை” என்று அவர்களுடைய இணை(தெய்வங்)கள் கூறும்.
الترجمة التاميلية - عمر شريف