84. மூஸா (தன் மக்களை நோக்கி) ‘‘என் மக்களே! நீங்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வை நம்பிக்கைக் கொண்டு, உண்மையாகவே நீங்கள் அவனுக்கு முற்றிலும் பணிந்து வழிப்படுகிறவர்களாகவும் இருந்தால், முற்றிலும் அவனையே நம்பி (அவனிடமே உங்கள் காரியங்கள் அனைத்தையும் ஒப்படைத்து) விடுங்கள்'' என்று கூறினார்.
الترجمة التاميلية
وَقَالَ مُوسَىٰ يَٰقَوۡمِ إِن كُنتُمۡ ءَامَنتُم بِٱللَّهِ فَعَلَيۡهِ تَوَكَّلُوٓاْ إِن كُنتُم مُّسۡلِمِينَ
மூஸா (தம் சமூகத்தவரிடம்); "என் சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்பவர்களாக இருந்து, நீங்கள் மெய்யாகவே அவனை முற்றிலும் வழிபடுபவர்களாகவே (முஸ்லீம்களாக) இருந்தால் அவனையே பூரணமாக நம்பி (உங்கள் காரியங்களை ஒப்படைத்து) விடுங்கள்" என்று கூறினார்.
Jan Trust Foundation - Tamil translation
“என் சமுதாயமே! நீங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், நீங்கள் முஸ்லிம்களாக இருந்தால், அவன் மீதே நம்பிக்கை வையுங்கள்.” என்று மூஸா கூறினார்.
الترجمة التاميلية - عمر شريف