88. மூஸா (தன் இறைவனை நோக்கி,) ‘‘என் இறைவனே! நிச்சயமாக நீ ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய மக்களுக்கும் (ஆடம்பர) அலங்காரங்களையும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய பொருள்களையும் அளித்திருக்கிறாய். ஆகவே, எங்கள் இறைவனே! அவர்கள் (அவற்றைக் கொண்டு மற்ற மனிதர்களை) உன் வழியிலிருந்து திருப்பி விடுகின்றனர். எங்கள் இறைவனே! அவர்களின் பொருள்களை நாசமாக்கி, அவர்களுடைய உள்ளங்களையும் கடினமாக்கி விடு. துன்புறுத்தும் வேதனையை அவர்கள் (கண்ணால்) காணும் வரை, அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்'' என்று பிரார்த்தித்தார்.
الترجمة التاميلية
وَقَالَ مُوسَىٰ رَبَّنَآ إِنَّكَ ءَاتَيۡتَ فِرۡعَوۡنَ وَمَلَأَهُۥ زِينَةٗ وَأَمۡوَٰلٗا فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا رَبَّنَا لِيُضِلُّواْ عَن سَبِيلِكَۖ رَبَّنَا ٱطۡمِسۡ عَلَىٰٓ أَمۡوَٰلِهِمۡ وَٱشۡدُدۡ عَلَىٰ قُلُوبِهِمۡ فَلَا يُؤۡمِنُواْ حَتَّىٰ يَرَوُاْ ٱلۡعَذَابَ ٱلۡأَلِيمَ
இன்னும்; "எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ ஃபிர்அவ்னுக்கும் அவனுடைய பிரமுகர்களுக்கும் அலங்காரத்தையும், இவ்வுலக வாழ்க்கையின் செல்வங்களையும் கொடுத்திருக்கிறாய்; எங்கள் இறைவனே! (அவற்றைக் கொண்டு) அவர்கள் உன் பாதையை விட்டு வழி கெடுக்கிறார்கள்; எங்கள் இறைவனே! அவர்களுடைய செல்வங்களை அழித்து, அவர்களுடைய நெஞ்சங்களையும் கடினமாக்கி விடுவாயாக! நோவினை தரும் வேதனையை அவர்கள் பார்க்காதவரையில், அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்" என்று மூஸா கூறினார்.
Jan Trust Foundation - Tamil translation
“எங்கள் இறைவா! நிச்சயமாக நீ ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய முக்கிய பிரமுகர்களுக்கும் (ஆடம்பர) அலங்காரத்தையும் இவ்வுலக வாழ்க்கையில் செல்வங்களையும் கொடுத்தாய். எங்கள் இறைவா! அவர்கள் உன் பாதையில் இருந்து (மக்களை) வழிகெடுப்பதற்கு (அவற்றை பயன்படுத்துகின்றனர்). எங்கள் இறைவா! அவர்களின் பொருள்களை நாசமாக்கு! அவர்களுடைய உள்ளங்களை இறுக்கிவிடு! துன்புறுத்தக்கூடிய வேதனையை அவர்கள் (கண்ணால்) காணும் வரை, நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்”என்று மூஸா கூறினார்.
الترجمة التاميلية - عمر شريف