90. இஸ்ராயீலின் சந்ததிகள் கடலைக் கடக்கும்படி நாம் செய்தோம். ஃபிர்அவ்னும் அவனுடைய ராணுவங்களும் அளவு கடந்த கொடுமை செய்ய(க் கருதி) அவர்களைப் பின் தொடர்ந்து சென்றார்கள். (ஆகவே, அவர்களை நாம் கடலில் மூழ்கடித்து விட்டோம்.) ஃபிர்அவ்ன் மூழ்க ஆரம்பிக்கவே, ‘‘இஸ்ராயீலின் சந்ததிகள் நம்பிக்கை கொண்டிருக்கும் இறைவனை நானும் நம்பிக்கை கொள்கிறேன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை; நான் அவனுக்கு முற்றிலும் பணிந்து வழிபடுகிறேன்'' என்று (அபயமிட்டு) அலறினான்.
الترجمة التاميلية
۞وَجَٰوَزۡنَا بِبَنِيٓ إِسۡرَـٰٓءِيلَ ٱلۡبَحۡرَ فَأَتۡبَعَهُمۡ فِرۡعَوۡنُ وَجُنُودُهُۥ بَغۡيٗا وَعَدۡوًاۖ حَتَّىٰٓ إِذَآ أَدۡرَكَهُ ٱلۡغَرَقُ قَالَ ءَامَنتُ أَنَّهُۥ لَآ إِلَٰهَ إِلَّا ٱلَّذِيٓ ءَامَنَتۡ بِهِۦ بَنُوٓاْ إِسۡرَـٰٓءِيلَ وَأَنَا۠ مِنَ ٱلۡمُسۡلِمِينَ
மேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்; அப்போது, ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும், (அளவு கடந்து) கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்; (அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன்; இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் ஈமான் கொள்கிறேன்; இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன்" என்று கூறினான்.
Jan Trust Foundation - Tamil translation
இஸ்ராயீலின் சந்ததிகளை கடலைக் கடக்க வைத்தோம். ஃபிர்அவ்னும் அவனுடைய ராணுவங்களும் அழிச்சாட்டியமாகவும் வரம்பு மீறியும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். இறுதியாக, மூழ்குதல் அவனை பிடித்தபோது, அவன் “நிச்சயமாக இஸ்ராயீலின் சந்ததிகள் நம்பிக்கை கொண்டவனைத் தவிர வேறு இறைவன் அறவே இல்லை என்று நம்பிக்கை கொண்டேன்; நான் முஸ்லிம்களில் உள்ளவன்”என்று கூறினான்.
الترجمة التاميلية - عمر شريف