30. இவ்வாறே அல்லாஹ் கண்ணியப்படுத்திய சிறப்பானவற்றை எவர் மகிமைப்படுத்துகிறாரோ அவருக்கு அது அவருடைய இறைவனிடத்தில் மிக்க நன்மையாகவே முடியும். (நீங்கள் புசிக்கக்கூடிய ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகளைப் பற்றி உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்ட (செத்தது, இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறி அறுக்கப்பட்ட)வற்றைத் தவிர மற்றவை ஆகுமாக்கப்பட்டு விட்டன. (அவற்றை நீங்கள் புசிக்கலாம்.) ஆகவே, சிலை வணக்க அசுத்தத்திலிருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ளுங்கள். மேலும், பொய்யான வார்த்தைகளில் இருந்தும் நீங்கள் தப்பித்துக் கொள்ளுங்கள்.''
الترجمة التاميلية
ذَٰلِكَۖ وَمَن يُعَظِّمۡ حُرُمَٰتِ ٱللَّهِ فَهُوَ خَيۡرٞ لَّهُۥ عِندَ رَبِّهِۦۗ وَأُحِلَّتۡ لَكُمُ ٱلۡأَنۡعَٰمُ إِلَّا مَا يُتۡلَىٰ عَلَيۡكُمۡۖ فَٱجۡتَنِبُواْ ٱلرِّجۡسَ مِنَ ٱلۡأَوۡثَٰنِ وَٱجۡتَنِبُواْ قَوۡلَ ٱلزُّورِ
இதுவே (முறையாகும்.) மேலும் அல்லாஹ்வின் புனிதமான கட்டளைகளை யார் மேன்மைப்படுத்துகிறாரோ அது அவருக்கு, அவருடைய இறைவனிடத்தில் சிறந்ததாகும்; இன்னும் நாற்கால் பிராணிகளில் உங்களுக்கு (ஆகாதவையென) ஓதப்பட்டதைத் தவிர (மற்றவை) உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன ஆகவே விக்கிரகங்களின் அசுசத்தத்திலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். அன்றியும் பொய்யான சொல்லையும் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்.
Jan Trust Foundation - Tamil translation
அவைதான் (-உங்களுக்கு ஏவப்பட்ட விஷயங்கள், அழுக்குகளை நீக்குவது, நேர்ச்சைகளை நிறைவேற்றுவது கஅபாவை தவாஃப் செய்வது- ஆகியவைதான். உங்கள் மீது கடமையாகும்.) எவர் அல்லாஹ்வுடைய புனிதங்களை (-மக்கா, ஹஜ், உம்ரா இன்னும் அவற்றில் தடுக்கப்பட்ட விஷயங்களை) எவர் மதிப்பாரோ அது அவருக்கு அவருடைய இறைவனிடம் மிகச் சிறந்தது. உங்களுக்கு கால்நடைகள் (அவற்றை அல்லாஹ்வின் பெயர்கூறி அறுத்து புசிப்பது) ஆகுமாக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு (இந்தக் குர்ஆனில் :) ஓதிக்காட்டப்படுபவற்றைத் தவிர. (அவை உங்களுக்கு தடுக்கப்பட்டுள்ளன.) அசுத்தங்களை -சிலைகளை- (வணங்குவதை) விட்டு விலகிக் கொள்ளுங்கள். பொய்யான பேச்சை விட்டு விலகிக் கொள்ளுங்கள்.
الترجمة التاميلية - عمر شريف