101. முன்மாதிரியின்றியே வானங்களையும் பூமியையும் அவன் படைத்தான் அவனுக்கு எவ்வாறு சந்ததியேற்படும்? அவனுக்கு மனைவி கிடையாதே! அனைத்தையும் அவனே படைத்திருக்கிறான். மேலும், அவன் அனைத்தையும் நன்கறிந்தவன்.
الترجمة التاميلية
بَدِيعُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ أَنَّىٰ يَكُونُ لَهُۥ وَلَدٞ وَلَمۡ تَكُن لَّهُۥ صَٰحِبَةٞۖ وَخَلَقَ كُلَّ شَيۡءٖۖ وَهُوَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٞ
அவன் வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி, எவரும் இல்லாதிருக்க, அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
Jan Trust Foundation - Tamil translation
(அவன்) வானங்கள் இன்னும் பூமியின் நூதன படைப்பாளன். அவனுக்கு எவ்வாறு சந்ததி இருக்கும்? அவனுக்கு மனைவி இல்லையே! எல்லாவற்றையும் படைத்தான். அவன் எல்லாவற்றையும் நன்கறிந்தவன்.
الترجمة التاميلية - عمر شريف