122. (வீழ்ச்சி அடைந்து) மரணித்தவர்களாக இருந்தவர்களில் எவரை நாம் உயிர்ப்பித்து மனிதர்களுக்கிடையில் நடமாடுவதற்குரிய ஒளியையும் கொடுத்திருக்கின்றோமோ அவர், இருளில் சிக்கி அதிலிருந்து வெளியேற முடியாமலிருப்பவனுக்குச் சமமாவாரா? இவ்வாறே நிராகரிப்பவர்களுக்கு அவர்களுடைய (தீய)செயல்கள் அழகாக்கப்பட்டு விட்டன.
الترجمة التاميلية
أَوَمَن كَانَ مَيۡتٗا فَأَحۡيَيۡنَٰهُ وَجَعَلۡنَا لَهُۥ نُورٗا يَمۡشِي بِهِۦ فِي ٱلنَّاسِ كَمَن مَّثَلُهُۥ فِي ٱلظُّلُمَٰتِ لَيۡسَ بِخَارِجٖ مِّنۡهَاۚ كَذَٰلِكَ زُيِّنَ لِلۡكَٰفِرِينَ مَا كَانُواْ يَعۡمَلُونَ
மரணம் அடைந்த ஒருவனை நாம் உயிர்ப்பித்து எழுப்பினோம் - இன்னும் அவனுக்கு ஓர் ஒளியையும் கொடுத்தோம். அதைக்கொண்டு அவன் மனிதர்களிடையே நடமாடுகிறான். மற்றொருவன் இருள்களில் சிக்கிக்கிடக்கிறான்; அதைவிட்டு அவன் வெளியேறவே முடியாது - இவ்விருவரும் சமமாவாரா? இவ்வாறு காஃபிர்களுக்கு அவர்கள் செய்யக்கூடிய (பாவச்)செயல்கள் அழகாக்கப்பட்டுள்ளன.
Jan Trust Foundation - Tamil translation
மரணித்தவராக இருந்த ஒருவர், அவரை நாம் உயிர்ப்பித்து மக்களுக்கு மத்தியில் நடமாடுவதற்கு ஓர் ஒளியையும் அவருக்கு நாம் ஏற்படுத்தினோமோ அவர் இருள்களில் இருந்து கொண்டு, அவற்றிலிருந்து வெளியேறாதவரைப் போல் ஆவாரா? இவ்வாறே நிராகரிப்பவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவை அழகாக்கப்பட்டன.
الترجمة التاميلية - عمر شريف