161. ‘‘நிச்சயமாக என் இறைவன் எனக்கு நேரான பாதையை அறிவித்து விட்டான். (அது) மிக்க உறுதியான மார்க்கமாகும், இப்ராஹீமுடைய நேரான மார்க்கமாகும். அவர் இணைவைத்து வணங்குபவர்களில் (ஒருவராக) இருக்கவில்லை'' என்று (நபியே!) கூறுவீராக.
الترجمة التاميلية
قُلۡ إِنَّنِي هَدَىٰنِي رَبِّيٓ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ دِينٗا قِيَمٗا مِّلَّةَ إِبۡرَٰهِيمَ حَنِيفٗاۚ وَمَا كَانَ مِنَ ٱلۡمُشۡرِكِينَ
(நபியே!) நீர் கூறும்; "மெய்யாகவே என் இறைவன் எனக்கு நேரான பாதையின் பால் வழி காட்டினான் - அது மிக்க உறுதியான மார்க்கமாகும்; இப்றாஹீமின் நேர்மையான மார்க்கமுமாகும், அவர் இணைவைப்வர்களில் ஒருவராக இருக்கவில்லை.
Jan Trust Foundation - Tamil translation
“நிச்சயமாக என் இறைவன் எனக்கு நேரான பாதையின் பக்கம் நேர்வழி காட்டினான். அது நிலையான மார்க்கமாகும், இப்ராஹீம் உடைய கொள்கையாகும். (அவர் மார்க்கத்தில்) உறுதியுடையவர். அவர் இணைவைப்பவர்களில் இருக்கவில்லை” என்று (நபியே!) கூறுவீராக.
الترجمة التاميلية - عمر شريف