25. (நபியே! உமக்கு கட்டுப்படுகிறவர்களைப் போல பாவனை செய்து நீர் கூறுவதைக் கேட்க) உமக்கு செவி சாய்ப்பவர்களும் அவர்களில் உண்டு. எனினும், அவர்கள் (தம் தீயச் செயல்களின் காரணமாக) அதை விளங்கிக் கொள்ளாதிருக்கும்படி அவர்களுடைய உள்ளங்களில் திரையையும் அவர்களுடைய காதுகளில் செவிட்டையும் நாம் ஏற்படுத்திவிட்டோம். ஆகவே, (இவர்கள் சத்தியத்திற்குரிய) அத்தாட்சிகள் அனைத்தையும் (தெளிவாகக்) கண்டபோதிலும் அவற்றை அவர்கள் (ஒரு சிறிதும்) நம்பவே மாட்டார்கள். (நபியே!) அவர்கள் உம்மிடம் வந்த போதிலும், உம்முடன் தர்க்கித்து, ‘‘இவை பழங்காலத்தில் உள்ளவர்களின் கட்டுக் கதைகளே தவிர வேறில்லை'' என்றே இந்நிராகரிப்பவர்கள் கூறுவார்கள்.
الترجمة التاميلية
وَمِنۡهُم مَّن يَسۡتَمِعُ إِلَيۡكَۖ وَجَعَلۡنَا عَلَىٰ قُلُوبِهِمۡ أَكِنَّةً أَن يَفۡقَهُوهُ وَفِيٓ ءَاذَانِهِمۡ وَقۡرٗاۚ وَإِن يَرَوۡاْ كُلَّ ءَايَةٖ لَّا يُؤۡمِنُواْ بِهَاۖ حَتَّىٰٓ إِذَا جَآءُوكَ يُجَٰدِلُونَكَ يَقُولُ ٱلَّذِينَ كَفَرُوٓاْ إِنۡ هَٰذَآ إِلَّآ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ
அவர்களில் சிலர் உம் பேச்சைக் கேட்(பது போல் பாவனை செய்)கின்றனர்; நாம் அவர்களுடைய உள்ளங்களில் அதை விளங்கிக் கொள்ளாது இருக்குமாறு திரைகளையும் இன்னும் அவர்கள் காதுகளில் செவிட்டுத் தன்மையும் ஏற்படுத்தினோம்; இன்னும் அவர்கள் எல்லா அத்தாட்சிகளையும் பார்த்தாலும் அவற்றை நம்பமாட்டார்கள்; இன்னும் இவர்கள் உம்மிடம் வந்தால் உம்மோடு வாதாடுவார்கள்; "இவையெல்லாம் முன்னோர்களுடைய கட்டுக் கதைகளேயன்றி வேறில்லை" என்று இந்நிராகரிப்போர் கூறுவார்கள்.
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) உம் பக்கம் செவிசாய்ப்பவரும் அவர்களில் உண்டு. அவர்களுடைய உள்ளங்களில் அதை புரிந்துகொள்வதற்கு (தடையாக) திரைகளையும், அவர்களுடைய காதுகளில் செவிட்டையும் ஆக்கினோம். எல்லா அத்தாட்சிகளையும் அவர்கள் பார்த்தாலும் அவற்றை (அவர்கள்) நம்பிக்கை கொள்ளமாட்டார்கள். (நபியே!) முடிவாக, அவர்கள் உம்மிடம் தர்க்கித்தவர்களாக வந்தால் நிராகரித்த (அ)வர்கள், “இவை முன்னோர்களின் கட்டுக்கதைகளைத் தவிர (வேறு) இல்லை” என்றே கூறுவார்கள்.
الترجمة التاميلية - عمر شريف