68. (நபியே!) நம் வசனங்களைப் பற்றி (வீண்) விவாதங்களில் மூழ்குபவர்களை நீர் கண்டால், அவர்கள் அதைத் தவிர்த்து வேறு விஷயத்தில் பிரவேசிக்கும் வரை நீங்கள் அவர்களைப் புறக்கணித்து விடுவீராக. (இக்கட்டளையை) ஷைத்தான் உமக்கு மறக்கடித்து (அவர்களுடன் நீரும் இருந்து) விட்டால், அது நினைவுக்கு வந்ததன் பின்னர் அந்த அநியாயக்கார மக்களுடன் நீர் அமர்ந்திருக்க வேண்டாம்.
الترجمة التاميلية
وَإِذَا رَأَيۡتَ ٱلَّذِينَ يَخُوضُونَ فِيٓ ءَايَٰتِنَا فَأَعۡرِضۡ عَنۡهُمۡ حَتَّىٰ يَخُوضُواْ فِي حَدِيثٍ غَيۡرِهِۦۚ وَإِمَّا يُنسِيَنَّكَ ٱلشَّيۡطَٰنُ فَلَا تَقۡعُدۡ بَعۡدَ ٱلذِّكۡرَىٰ مَعَ ٱلۡقَوۡمِ ٱلظَّـٰلِمِينَ
(நபியே!) நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும்; (இக்கட்டளையைவிட்டு) ஷைத்தான் உம்மை மறக்கும்படிச் செய்துவிட்டால், நினைவு வந்ததும், அந்த அநியாயக்கார கூட்டத்தினருடன் நீர் அமர்ந்திருக்க வேண்டாம்.
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) நம் வசனங்களில் (அவற்றை பரிகசித்து) மூழ்குபவர்களைக்கண்டால், அவர்கள் அது அல்லாத (வேறு) பேச்சில் மூழ்கும் வரை அவர்களைப் புறக்கணிப்பீராக. ஷைத்தான் உம்மை மறக்கடித்தால், நினைவுக்குப் பின்னர் அநியாயக்கார கூட்டத்துடன் அமராதீர்.
الترجمة التاميلية - عمر شريف