77. பின்னர், உதயமான சந்திரனைக் காணவே ‘‘இது என் இறைவன் (ஆகுமா?)'' எனக் கேட்டு, அதுவும் அஸ்தமித்து மறையவே (அதையும் நிராகரித்துவிட்டு), ‘‘எனது இறைவன் எனக்கு நேரான வழியை அறிவிக்காவிட்டால் வழி தவறிய மக்களில் நிச்சயமாக நானும் ஒருவனாகிவிடுவேன்'' என்று கூறினார்.
الترجمة التاميلية
فَلَمَّا رَءَا ٱلۡقَمَرَ بَازِغٗا قَالَ هَٰذَا رَبِّيۖ فَلَمَّآ أَفَلَ قَالَ لَئِن لَّمۡ يَهۡدِنِي رَبِّي لَأَكُونَنَّ مِنَ ٱلۡقَوۡمِ ٱلضَّآلِّينَ
பின்னர் சந்திரன் (பிரகாசத்துடன்) உதயமாவதைக் கண்டு, அவர், "இதுவே என் இறைவன்" என்று கூறினார். ஆனால் அது மறைந்த போது அவர், "என் இறைவன் எனக்கு நேர்வழி காட்டவில்லையானால், நான் நிச்சயமாக வழி தவறியவர்கள் கூட்டத்தில் (ஒருவனாக) ஆகிவிடுவேன்" என்று கூறினார்.
Jan Trust Foundation - Tamil translation
உதயமாகிய சந்திரனைக் கண்டபோது, "இது என் இறைவன்'' எனக் கூறினார். அது மறைந்தபோது "என் இறைவன் என்னை நேர்வழிபடுத்தாவிட்டால் வழிகெட்ட சமுதாயத்தில் நிச்சயமாக நான் ஆகிவிடுவேன்'' எனக் கூறினார்.
الترجمة التاميلية - عمر شريف