160. ஆகவே, யூதர்களின் (இத்தகைய) அநியாயங்களின் காரணமாகவும், (அவ்வாறே) அல்லாஹ்வின் பாதையை விட்டு பலரைத் தடுத்துக் கொண்டிருந்ததின் காரணமாகவும் அவர்களுக்கு அனுமதிக்கப் பட்டிருந்தவற்றில் நல்லவற்றை நாம் அவர்களுக்கு விலக்கிவிட்டோம்.
الترجمة التاميلية
فَبِظُلۡمٖ مِّنَ ٱلَّذِينَ هَادُواْ حَرَّمۡنَا عَلَيۡهِمۡ طَيِّبَٰتٍ أُحِلَّتۡ لَهُمۡ وَبِصَدِّهِمۡ عَن سَبِيلِ ٱللَّهِ كَثِيرٗا
எனவே யூதர்களாக இருந்த அவர்களுடைய அக்கிரமத்தின் காரணமாக அவர்களுக்கு (முன்னர்) ஆகுமாக்கப்பட்டிருந்த நல்ல (ஆகார) வகைகளை அவர்களுக்கு ஹராமாக்கி (விலக்கி) விட்டோம்;. இன்னும் அவர்கள் அநேகரை அல்லாஹ்வின் பாதையில் செல்லவிடாது தடுத்துக் கொண்டிருந்ததனாலும் (அவர்களுக்கு இவ்வாறு தடை செய்தோம்.)
Jan Trust Foundation - Tamil translation
யூதர்களின் அநியாயம், அல்லாஹ்வின் பாதையை விட்டு அதிகமானவர்களை அவர்கள் தடுப்பது, அவர்கள் வட்டி வாங்குவது, அவர்களுமோ அதிலிருந்து தடுக்கப்பட்டிருக்க இன்னும் மக்களின் செல்வங்களை அவர்கள் தப்பான வழியில் சாப்பிடுவது ஆகியவற்றின் காரணமாக அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட (சில) நல்லவற்றை அவர்களுக்கு விலக்கினோம். அவர்களில் நிராகரிப்பாளர்களுக்குத் துன்புறுத்தக்கூடிய வேதனையை ஏற்படுத்தினோம்.
الترجمة التاميلية - عمر شريف