110. முன்னர் அவர்கள் இ(வ்வேதத்)தை நம்பிக்கை கொள்ளாமல் இருந்தபடியே (இப்பொழுதும் நம்பிக்கை கொள்ளாது இருப்பதற்காக) நாம் அவர்களுடைய உள்ளங்களையும் பார்வைகளையும் புரட்டி அவர்களுடைய வழிகேட்டிலேயே அவர்களை தட்டழிந்து திரியும்படி விட்டிருக்கிறோம்.
الترجمة التاميلية
وَنُقَلِّبُ أَفۡـِٔدَتَهُمۡ وَأَبۡصَٰرَهُمۡ كَمَا لَمۡ يُؤۡمِنُواْ بِهِۦٓ أَوَّلَ مَرَّةٖ وَنَذَرُهُمۡ فِي طُغۡيَٰنِهِمۡ يَعۡمَهُونَ
மேலும், நாம் அவர்களுடைய உள்ளங்களையும் அவர்களுடைய பார்வைகளையும் திருப்பிவிடுவோம் - அவர்கள் முதலில் இதை நம்பாமல் இருந்தது போலவே இன்னும் அவர்கள் தங்களுடைய வழி கேட்டிலேயே தட்டழிந்து திரியுமாறு அவர்களை நாம் விட்டுவிடுவோம்.
Jan Trust Foundation - Tamil translation
முதல் முறையாக அவர்கள் இ(வ்வேதத்)தை நம்பிக்கை கொள்ளாதது போன்றே நாம் அவர்களுடைய உள்ளங்களையும் அவர்களுடைய பார்வைகளையும் புரட்டுகிறோம்; அவர்களுடைய அட்டூழியத்தில் (மேலும்) கடுமையாக அட்டூழியம் செய்பவர்களாக அவர்களை (விட்டு) விடுகிறோம.
الترجمة التاميلية - عمر شريف