130. (இறைவன் மறுமையில் மனிதர்களையும் ஜின்களையும் நோக்கி) ‘‘மனித, ஜின் கூட்டத்தார்களே! உங்களில் தோன்றிய (நம்) தூதர்கள் உங்களிடம் வந்து நம் வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பித்து நீங்கள் நம்மைச் சந்திக்கும் இந்நாளைப் பற்றியும் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யவில்லையா?'' என்(று கேட்)பான். அதற்கவர்கள் ‘‘(எங்கள் இறைவனே! உண்மைதான்) இவ்வுலக வாழ்க்கை எங்களை மயக்கிவிட்டது'' என்று தங்களுக்கு எதிராக சாட்சியம் கூறுவதுடன், நிச்சயமாக தாங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததாகவும் தங்களுக்குத் தாமே எதிராக அவர்கள் சாட்சியம் கூறுவார்கள்.
الترجمة التاميلية
يَٰمَعۡشَرَ ٱلۡجِنِّ وَٱلۡإِنسِ أَلَمۡ يَأۡتِكُمۡ رُسُلٞ مِّنكُمۡ يَقُصُّونَ عَلَيۡكُمۡ ءَايَٰتِي وَيُنذِرُونَكُمۡ لِقَآءَ يَوۡمِكُمۡ هَٰذَاۚ قَالُواْ شَهِدۡنَا عَلَىٰٓ أَنفُسِنَاۖ وَغَرَّتۡهُمُ ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَا وَشَهِدُواْ عَلَىٰٓ أَنفُسِهِمۡ أَنَّهُمۡ كَانُواْ كَٰفِرِينَ
(மறுமை நாளில் இறைவன் ஜின்களையும் மனிதர்களையும் நோக்கி) "ஜின்கள், மனிதர்கள் கூட்டத்தாரே! உங்களுக்கு என் வசனங்களை (அறிவித்து) ஓதிக்காட்டவும், இந்த நாளில் (ஏற்படப்போகும்) சந்திப்பைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்யவும் உங்களிலிருந்தே உங்களிடம் தூதர்கள் வரவில்லையா?" (என்று கேட்பான்), அதற்கு அவர்கள், "நாங்களே எங்கள் (பாவத்தின்) மீது சாட்சி கூறுகிறோம்" என்று கூறுவார்கள்; இதற்குக்காரணம் உலக வாழ்க்கை அவர்களை மயக்கிவிட்டது - அவர்கள் காஃபிர்களாக இருந்ததாக அவர்கள் தங்களுக்கு எதிராகவே சாட்சி கூறுவார்கள்.
Jan Trust Foundation - Tamil translation
"ஜின்கள் மற்றும் மனிதர்களின் கூட்டமே! உங்களிலிருந்து தூதர்கள் என் வசனங்களை உங்களுக்கு விவரிப்பவர்களாக, உங்கள் இந்நாளை உங்களுக்கு எச்சரிப்பவர்களாக உங்களிடம் வரவில்லையா?'' என்று கூறுவான். அதற்கவர்கள், "(எங்கள் இறைவனே!) எங்களுக்கு எதிராக சாட்சியளித்தோம்'' என்று கூறுவார்கள். உலக வாழ்வு அவர்களை மயக்கி விட்டது; நிச்சயமாக அவர்கள் நிராகரிப்பாளர்களாக இருந்தார்கள் என்று அவர்கள் தங்களுக்கு எதிராகவே சாட்சி கூறுவார்கள்.
الترجمة التاميلية - عمر شريف