135. (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘என் மக்களே! நீங்கள் உங்கள் போக்கில் (உங்கள்) காரியங்களைச் செய்துகொண்டே இருங்கள். நிச்சயமாக நானும் (என் போக்கில் என்) காரியங்களைச் செய்து கொண்டிருப்பேன். இம்மையின் முடிவு எவருக்குச் சாதகமாக இருக்கிறது என்பதை பின்னர் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றி பெறமாட்டார்கள்.''
الترجمة التاميلية
قُلۡ يَٰقَوۡمِ ٱعۡمَلُواْ عَلَىٰ مَكَانَتِكُمۡ إِنِّي عَامِلٞۖ فَسَوۡفَ تَعۡلَمُونَ مَن تَكُونُ لَهُۥ عَٰقِبَةُ ٱلدَّارِۚ إِنَّهُۥ لَا يُفۡلِحُ ٱلظَّـٰلِمُونَ
(நபியே!) நீர் கூறும்; "என்னுடைய கூட்டத்தாரே! நீங்கள் உங்கள் நிலைமைக் கொப்ப காரியங்களைச் செய்து கொண்டிருங்கள்; நானும் (காரியங்கள்) செய்து கொண்டிருப்பவனே, அப்பால், இவ்வுலகத்தின் இறுதி முடிவு யாருக்கு நலமாக இருக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள் - நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றிபெற மாட்டார்கள்."
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) கூறுவீராக: "என் சமுதாயமே! உங்கள் போக்கில் (நீங்கள்) செய்யுங்கள். நிச்சயமாக நான் (என் இறைவனின் கட்டளைப்படி) செய்கிறேன். மறுமையின் (நல்ல) முடிவு எவருக்கு இருக்கும் என்பதை (நீங்கள் விரைவில்) அறிவீர்கள். நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றிபெற மாட்டார்கள்.''
الترجمة التاميلية - عمر شريف