139. மேலும், அவர்கள் (வேறு சிலவற்றைக் குறிப்பிட்டு) ‘‘இந்த ஆடு, மாடு, ஒட்டகங்களின் வயிற்றிலிருப்பவை எங்கள் ஆண்களுக்கு (மட்டும்) சொந்தமானவை. எங்கள் பெண்களுக்கு அவை தடுக்கப்பட்டு இருக்கின்றன. அவை செத்துப் பிறந்தால் அவற்றில் அவர்களுக்கும் பங்குண்டு'' (அப்போது பெண்களும் புசிக்கலாம்) என்றும் கூறுகின்றனர். ஆகவே, அவர்களுடைய இக்கூற்றிற்குரிய தண்டனையை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுத்தே தீருவான். நிச்சயமாக அவன் மிக்க ஞானமுடையவன், (அனைவரையும்) நன்கறிந்தவன்.
الترجمة التاميلية
وَقَالُواْ مَا فِي بُطُونِ هَٰذِهِ ٱلۡأَنۡعَٰمِ خَالِصَةٞ لِّذُكُورِنَا وَمُحَرَّمٌ عَلَىٰٓ أَزۡوَٰجِنَاۖ وَإِن يَكُن مَّيۡتَةٗ فَهُمۡ فِيهِ شُرَكَآءُۚ سَيَجۡزِيهِمۡ وَصۡفَهُمۡۚ إِنَّهُۥ حَكِيمٌ عَلِيمٞ
மேலும் அவர்கள், "இந்தக் கால் நடைகளின் வயிற்றில் இருக்கும் குட்டிகள் எங்கள் ஆண்களுக்கு மட்டுமே சொந்தம். அவை எங்கள் பெண்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளன - அவை செத்துப் பிறந்தால், அவற்றில் அவர்களுக்கும் பங்கு உண்டு" என்றும் கூறுகிறார்கள்; அவர்களுடைய (இந்தப் பொய்யான) கூற்றுக்கு அவன் தக்க கூலி கொடுப்பான் - நிச்சயமாக அவன் பூரண ஞானமுடையோனும், (யாவற்றையும்) அநிந்தவனுமாக இருக்கின்றான்.
Jan Trust Foundation - Tamil translation
"இந்த கால்நடைகளின் வயிறுகளில் இருப்பது எங்கள் ஆண்களுக்கு மட்டும் உரியது. (அதை அவர்கள் புசிக்கலாம். அது) எங்கள் பெண்களுக்கு தடுக்கப்பட்டது. அது செத்ததாக இருந்தால் அதில் அவர்களும் பங்காளிகள்'' என்று கூறினர். அவர்களுடைய (இவ்)வர்ணிப்பிற்கு அவன் அவர்களுக்கு(த் தகுந்தக்)கூலி கொடுப்பான். நிச்சயமாக அவன் ஞானவான், நன்கறிந்தவன்.
الترجمة التاميلية - عمر شريف