146. (நபியே!) நகத்தையுடைய பிராணிகள் (பிளவில்லாத குளம்புகளை உடைய ஒட்டகை, தீப்பறவை, வாத்து போன்ற) அனைத்தையும் (புசிக்கக் கூடாது என்று) யூதர்களுக்கு நாம் தடுத்திருந்தோம். மேலும், ஆடு, மாடு ஆகியவற்றிலும், அவற்றின் முதுகிலோ அல்லது வயிற்றிலோ அல்லது எலும்புடன் கலந்தோ உள்ளவற்றைத் தவிர (மற்ற பாகங்களில் உள்ள) கொழுப்புக்களையும் நாம் அவர்களுக்கு விலக்கியே இருந்தோம். அவர்கள் (நமக்கு) மாறு செய்ததற்குத் தண்டனையாக இவ்வாறு (தடுத்துத்) தண்டித்து இருந்தோம். நிச்சயமாக நாம்தான் உண்மை கூறுகிறோம். (இதற்கு மாறாகக் கூறும் யூதர்கள் பொய்யர்களே!)
الترجمة التاميلية
وَعَلَى ٱلَّذِينَ هَادُواْ حَرَّمۡنَا كُلَّ ذِي ظُفُرٖۖ وَمِنَ ٱلۡبَقَرِ وَٱلۡغَنَمِ حَرَّمۡنَا عَلَيۡهِمۡ شُحُومَهُمَآ إِلَّا مَا حَمَلَتۡ ظُهُورُهُمَآ أَوِ ٱلۡحَوَايَآ أَوۡ مَا ٱخۡتَلَطَ بِعَظۡمٖۚ ذَٰلِكَ جَزَيۡنَٰهُم بِبَغۡيِهِمۡۖ وَإِنَّا لَصَٰدِقُونَ
நகத்தையுடைய அனைத்தையும் யூதர்களுக்கு நாம் ஹராமாக்கியிருந்தோம்; ஆடு, மாடு ஆகியவற்றில் - அவற்றின் முதுகுகளிலோ அல்லது வயிறுகளிலோ அல்லது எலும்புகளுடன் கலந்தோ இருக்கும் கொழுப்பைத் தவிர மற்ற அவற்றின் கொழுப்பையும் ஹராமாக்கினோம் - அவர்கள் அக்கிரமம் செய்த காரணத்தினால் அவர்களுக்கு இதனை நாம் கூலியாக கொடுத்தோம் - நிச்சயமாக நாம் உண்மையே கூறுகிறோம்.
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) நகமுடைய (பிராணிகள் ஒட்டகம், தீக்கோழி, வாத்து வகைகள்) எல்லாவற்றையும் யூதர்கள் மீது தடை செய்தோம். மாடு இன்னும் ஆட்டிலும் அந்த இரண்டின் கொழுப்புகளை அவர்கள் மீது தடை செய்தோம். அந்த இரண்டின் முதுகுகள் அல்லது சிறு குடல்கள் சுமந்துள்ள அல்லது எலும்புடன் கலந்துள்ளதைத் தவிர (அந்த கொழுப்புகளை அவர்கள் சாப்பிடலாம்). அ(தன் காரணமாவ)து அவர்களுடைய அழிச்சாட்டியத்தினால் அவர்களுக்கு நாம் (தகுந்த) கூலி கொடுத்தோம். நிச்சயமாக நாம் உண்மையாளர்களே.
الترجمة التاميلية - عمر شريف