153. ‘‘நிச்சயமாக இதுதான் என் நேரான வழியாகும். அதையே நீங்கள் பின்பற்றுங்கள்; மற்ற வழிகளைப் பின்பற்றாதீர்கள். அவை அல்லாஹ்வுடைய வழியிலிருந்து உங்களைப் பிரித்துவிடும். நீங்கள் இறையச்சமுடையவர்களாக ஆவதற்காக (உங்கள் இறைவன்) இவற்றை உங்களுக்கு உபதேசிக்கிறான்'' (என்று கூறுங்கள்).
الترجمة التاميلية
وَأَنَّ هَٰذَا صِرَٰطِي مُسۡتَقِيمٗا فَٱتَّبِعُوهُۖ وَلَا تَتَّبِعُواْ ٱلسُّبُلَ فَتَفَرَّقَ بِكُمۡ عَن سَبِيلِهِۦۚ ذَٰلِكُمۡ وَصَّىٰكُم بِهِۦ لَعَلَّكُمۡ تَتَّقُونَ
நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள் - இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் - அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான்.
Jan Trust Foundation - Tamil translation
"நிச்சயமாக இது என் நேரான பாதையாகும். அதைப் பின்பற்றுங்கள்; (மற்ற) வழிகளைப் பின்பற்றாதீர்கள். அவை அவனுடைய வழியிலிருந்து உங்களைப் பிரித்துவிடும். நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக (அவன்) இவற்றைக் கொண்டு உங்களுக்கு உபதேசிக்கிறான்'' (என்று கூறுவீராக).
الترجمة التاميلية - عمر شريف