164. ‘‘அல்லாஹ்வே அனைவரையும் படைத்து பரிபாலிக்க அவனையன்றி மற்றெவரையும் எனக்கு இறைவனாக நான்எடுத்துக் கொள்வேனா? பாவம் செய்யும் ஒவ்வொரு ஆத்மாவும் தனக்கே கேட்டைத் தேடிக் கொள்கிறது. ஆகவே, ஓர் ஆத்மாவின் (பாவச்) சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது. (இறந்த) பின்னர் நீங்கள் அனைவரும் உங்கள் இறைவனிடமே செல்வீர்கள். நீங்கள் கருத்து வேற்றுமை கொண்டிருந்ததைப் பற்றி (அவற்றில் எது தவறு, எது சரி என்பதை அது சமயம்) அவன் உங்களுக்கு அறிவிப்பான்.
الترجمة التاميلية
قُلۡ أَغَيۡرَ ٱللَّهِ أَبۡغِي رَبّٗا وَهُوَ رَبُّ كُلِّ شَيۡءٖۚ وَلَا تَكۡسِبُ كُلُّ نَفۡسٍ إِلَّا عَلَيۡهَاۚ وَلَا تَزِرُ وَازِرَةٞ وِزۡرَ أُخۡرَىٰۚ ثُمَّ إِلَىٰ رَبِّكُم مَّرۡجِعُكُمۡ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمۡ فِيهِ تَخۡتَلِفُونَ
"அல்லாஹ்வை அன்றி மற்றெவரையாவது நான் இறைவனாக எடுத்துக் கொள்வேனா? எல்லாப் பொருள்களுக்கும் அவனே இறைவனாக இருக்கின்றான் - பாவம் செய்யும் ஒவ்வோர் ஆத்மாவும் தனக்கே, கேட்டைத் தேடிக்கொள்கிறது ஓர் ஆத்மாவின் (பாவச்)சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது. பின்னர், நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் பக்கமே திரும்பிச் செல்ல வேண்டியதிருக்கிறது அப்போது நீங்கள் பிணங்கி விவாதம் செய்து கொண்டிருந்தவை பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்" என்று (நபியே!) நீர் கூறும்.
Jan Trust Foundation - Tamil translation
அல்லாஹ் அல்லாதவனையா -அவன் எல்லாவற்றின் இறைவனாக இருக்கல- நான் இறைவனாக (எனக்கு)த் தேடுவேன்? (பாவம் செய்கிற) ஒவ்வோர் ஆன்மா(வும்) தனக்கெதிராகவே தவிர (பாவம்) செய்வதில்லை. பாவம் செய்யக்கூடிய ஓர் ஆன்மா மற்றொன்றின் பாவத்தை சுமக்காது. (இறந்த) பிறகு, உங்கள் இறைவன் பக்கம்தான் உங்கள் மீட்சி இருக்கிறது. நீங்கள் முரண்பட்டு கொண்டிருந்தவற்றில் (எது தவறு, எது சரி என்று அவன்) உங்களுக்கு அறிவிப்பான்.
الترجمة التاميلية - عمر شريف