33. (நபியே! உம்மைப் பொய்யரென) அவர்கள் கூறுவது, நிச்சயமாக உமக்குக் கவலையைத் தருகிறது என்பதை உறுதியாக நாம் அறிவோம். நிச்சயமாக அவர்கள் உம்மைப் பொய்யாக்கவில்லை. ஆனால், இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களைத்தான் (பொய்யாக்கி) நிராகரிக்கின்றனர்.
الترجمة التاميلية
قَدۡ نَعۡلَمُ إِنَّهُۥ لَيَحۡزُنُكَ ٱلَّذِي يَقُولُونَۖ فَإِنَّهُمۡ لَا يُكَذِّبُونَكَ وَلَٰكِنَّ ٱلظَّـٰلِمِينَ بِـَٔايَٰتِ ٱللَّهِ يَجۡحَدُونَ
(நபியே!) அவர்கள் (உம்மைப் பொய்யரெனக்) கூறுவது நிச்சயமாக உம்மைக் கவலையில் ஆழ்த்துகிறது என்பதை நாம் அறிவோம்; அவர்கள் உம்மைப் பொய்யாக்கவில்லை ஆனால் இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களையல்லலவா மறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) அவர்கள் கூறுவது, நிச்சயமாக உமக்கு கவலையளிக்கிறது என்பதை திட்டமாக அறிவோம். நிச்சயமாக அவர்கள் உம்மைப் பொய்ப்பிப்பதில்லை. எனினும், அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களை (பொய்ப்பித்து) மறுக்கின்றனர்.
الترجمة التاميلية - عمر شريف