36. எவர்கள் (உமக்குச்) செவிசாய்க்கக்கூடிய (உயிருள்ள)வர்களாக இருக்கின்றனரோ அவர்கள்தான் (உம்மை) ஏற்றுக்கொள்வார்கள். (ஆனால், இந்த நிராகரிப்பாளர்களோ செவிமடுக்க முடியாத இறந்தவர்களைப் போலவே இருக்கின்றனர்.) ஆகவே, இறந்தவர்களை (மறுமையில் தான்) அல்லாஹ் உயிர்ப்பிப்பான். பின்னர் அவனிடமே கொண்டுவரப்படுவார்கள்.
الترجمة التاميلية
۞إِنَّمَا يَسۡتَجِيبُ ٱلَّذِينَ يَسۡمَعُونَۘ وَٱلۡمَوۡتَىٰ يَبۡعَثُهُمُ ٱللَّهُ ثُمَّ إِلَيۡهِ يُرۡجَعُونَ
(சத்தியத்திற்கு) செவிசாய்ப்போர்தாம் நிச்சயமாக உம் உபதேசத்தை ஏற்றுக் கொள்வார்கள்; (மற்றவர்கள் உயிரற்றவர்களைப் போன்றோரே!) இறந்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பித்து எழுப்புவான்; பின்னர் அவனிடமே அவர்கள் மீட்டப்படுவார்கள்.
Jan Trust Foundation - Tamil translation
(உண்மையை) ஏற்றுக் கொள்வதெல்லாம் செவிசாய்ப்பவர்கள்தான். இறந்தவர்களை அல்லாஹ் எழுப்புவான். பிறகு, அவனிடமே திருப்பப்படுவார்கள்.
الترجمة التاميلية - عمر شريف