37. (‘‘நம் விருப்பப்படி) ஓர் அத்தாட்சியை அவருடைய இறைவன் அவர்மீது இறக்கிவைக்க வேண்டாமா?'' என்று அவர்கள் கூறுகின்றனர். அதற்கு (நபியே!) நீர் கூறுவீராக: (அத்தகைய) ஓர் அத்தாட்சியை இறக்கிவைக்க நிச்சயமாக அல்லாஹ் சக்தியுடையவன்தான். (அவ்வாறு இறக்கியும் வைத்துள்ளான்.) எனினும் அவர்களில் பெரும்பாலோர் (அதை) அறிந்து கொள்வதில்லை.
الترجمة التاميلية
وَقَالُواْ لَوۡلَا نُزِّلَ عَلَيۡهِ ءَايَةٞ مِّن رَّبِّهِۦۚ قُلۡ إِنَّ ٱللَّهَ قَادِرٌ عَلَىٰٓ أَن يُنَزِّلَ ءَايَةٗ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَعۡلَمُونَ
(நமது விருப்பம் போல்) ஓர் அத்தாட்சி அவருடைய இறைவனிடமிருந்து அவர் மீது இறக்கப்பட வேண்டாமா? என்று அவர்கள் கேட்கிறார்கள்; (நபியே!) நீர் கூறும்; "நிச்சயமாக அல்லாஹ் (அத்தகைய) ஓர் அத்தாட்சியை இறக்கி வைக்க வல்லமையுடையவனே எனினும் அவர்களில் பெரும்பாலோர் அதை அறிந்து கொள்வதில்லை"
Jan Trust Foundation - Tamil translation
"(நம் விருப்பப்படி) ஓர் அத்தாட்சி அவருடைய இறைவனிடமிருந்து அவர் மீது இறக்கப்பட வேண்டாமா?'' என்று கூறினர். (நபியே!) கூறுவீராக: ஓர் அத்தாட்சியை இறக்க நிச்சயமாக அல்லாஹ் ஆற்றலுடையவன். எனினும் அவர்களில் அதிகமானோர் அறியமாட்டார்கள்.
الترجمة التاميلية - عمر شريف