39. எவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்குகிறார்களோ அவர்கள் இருள்களில் (தட்டழியும்) செவிடர்களாகவும், ஊமையர்களாகவும் இருக்கின்றனர். அல்லாஹ், தான் நாடியவர்களைத் தவறான வழியில் செல்ல விட்டுவிடுகிறான்; அவன் நாடியவர்களை நேரான வழியில் செலுத்துகிறான்.
الترجمة التاميلية
وَٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا صُمّٞ وَبُكۡمٞ فِي ٱلظُّلُمَٰتِۗ مَن يَشَإِ ٱللَّهُ يُضۡلِلۡهُ وَمَن يَشَأۡ يَجۡعَلۡهُ عَلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ
நம்முடைய வசனங்களைப் பொய்ப்பிப்பவர்கள் (குஃப்ரு என்னும்) இருள்களில் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும் இருக்கின்றனர்; அல்லாஹ் தான் நாடியவர்களைத் தவறான வழியில் செல்ல விட்டு விடுகிறான்; இன்னும் அவன் நாடியவரை நேர்வழியில் செலுத்துகின்றான்.
Jan Trust Foundation - Tamil translation
நம் வசனங்களைப் பொய்ப்பித்தவர்கள் இருள்களில் (சிக்கிய) செவிடர்கள், ஊமையர்கள் (போல்) ஆவர். அல்லாஹ், தான் நாடியவரை வழிகெடுக்கிறான்; தான் நாடியவரை நேரான பாதையில் ஆக்குகிறான்.
الترجمة التاميلية - عمر شريف