42. (நபியே!) உமக்கு முன்னிருந்த பல வகுப்பினருக்கும் நாம் (நம் தூதர்களை) நிச்சயமாக அனுப்பி வைத்தோம். (எனினும் அத்தூதர்களை அவர்கள் நிராகரித்து விட்டனர். ஆகவே,) அவர்கள் பணிந்து வருவதற்காக நோயைக் கொண்டும், வறுமையைக் கொண்டும் நாம் அவர்களைப் பிடித்தோம்.
الترجمة التاميلية
وَلَقَدۡ أَرۡسَلۡنَآ إِلَىٰٓ أُمَمٖ مِّن قَبۡلِكَ فَأَخَذۡنَٰهُم بِٱلۡبَأۡسَآءِ وَٱلضَّرَّآءِ لَعَلَّهُمۡ يَتَضَرَّعُونَ
(நபியே!) உமக்கு முன்னர் இருந்த சமூகத்தாருக்கும் நாம் (நம்) தூதர்களை அனுப்பினோம்; அச்சமூகத்தாரை நோயைக் கொண்டும் வறுமையைக் கொண்டும் பிடித்தோம் - அவர்கள் பணிந்து வரும் பொருட்டு.
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) உமக்கு முன்னர் பல சமுதாயங்களுக்கு (தூதர்களை) திட்டவட்டமாக அனுப்பினோம். (அவர்கள் நிராகரித்து விடவே) அவர்கள் பணிவதற்காக வறுமை இன்னும் நோயைக் கொண்டு அவர்களைப் பிடித்தோம்.
الترجمة التاميلية - عمر شريف