57. (நபியே! மேலும்,) கூறுவீராக: ‘‘நிச்சயமாக நான் என் இறைவனின் தெளிவான அத்தாட்சியின் மீதே இருக்கிறேன். எனினும், அதை நீங்கள் பொய்யாக்கினீர்கள். எதற்கு நீங்கள் அவசரப்படுகிறீர்களோ அ(ந்த வேதனையான)து என்னிடம் இல்லை. (அதன்) அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே தவிர (வேறு) எவருக்குமில்லை. அவன் உண்மையையே கூறுகிறான். அவன் தீர்ப்பளிப்பவர்களில் மிக மேலானவன்.
الترجمة التاميلية
قُلۡ إِنِّي عَلَىٰ بَيِّنَةٖ مِّن رَّبِّي وَكَذَّبۡتُم بِهِۦۚ مَا عِندِي مَا تَسۡتَعۡجِلُونَ بِهِۦٓۚ إِنِ ٱلۡحُكۡمُ إِلَّا لِلَّهِۖ يَقُصُّ ٱلۡحَقَّۖ وَهُوَ خَيۡرُ ٱلۡفَٰصِلِينَ
பின்னும் நீர் கூறும்; "நான் என்னுடைய ரப்பின் தெளிவான அத்தாட்சியின் மீதே இருக்கின்றேன்; ஆனால் நீங்களோ அதைப் பொய்ப்பிக்கின்றீர்கள். நீங்கள் எதற்கு அவசரப்படுகின்றீர்களோ அ(வ்வேதனையான)து என் அதிகாரத்தில் இல்லை அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்விடமேயன்றி வேறில்லை சத்தியத்தையே அவன் கூறுகின்றான், தீர்ப்பு வழங்குவோரில் அவனே மிகவும் மேலானவனாக இருக்கிறான்.
Jan Trust Foundation - Tamil translation
கூறுவீராக: "நிச்சயமாக நான் என் இறைவனின் (தெளிவான) ஓர் அத்தாட்சியின் மீதிருக்கிறேன். அவனை (நீங்கள்) பொய்ப்பித்தீர்கள். நீங்கள் அவசரப்படுவது என்னிடம் இல்லை. (எவருக்கும்) அதிகாரம் இல்லை அல்லாஹ்வுக்கே தவிர. (அவன்) உண்மையை விவரிக்கிறான். தீர்ப்பாளர்களில் அவன் மிக மேலானவன்.''
الترجمة التاميلية - عمر شريف