61. அவன் தன் அடியார்களை அடக்கி ஆளுகிறான்; மேலும், உங்களுக்குப் பாதுகாவலர்களையும் ஏற்படுத்துகிறான். (மரண நேரம் வரும்வரை அவர்கள் உங்களை பாதுகாக்கின்றனர்,) பின்னர், உங்களில் ஒருவருக்கு மரணம் வந்தால் நமது (வானவத்) தூதர்கள் அவரை உயிர் வாங்குகின்றனர். அவர்கள் (குறித்த காலத்திற்கு முன்னரோ, பின்னரோ உயிரைக் கைப்பற்றி) ஏதும் தவறிழைப்பதில்லை.
الترجمة التاميلية
وَهُوَ ٱلۡقَاهِرُ فَوۡقَ عِبَادِهِۦۖ وَيُرۡسِلُ عَلَيۡكُمۡ حَفَظَةً حَتَّىٰٓ إِذَا جَآءَ أَحَدَكُمُ ٱلۡمَوۡتُ تَوَفَّتۡهُ رُسُلُنَا وَهُمۡ لَا يُفَرِّطُونَ
அவன் தன் அடியார்களை அடக்கியாளுபவனாக இருக்கிறான்; அன்றியும், உங்கள் மீது பாதுகாப்பாளர்களையும் அனுப்புகிறான்; உங்களில் ஒருவருக்கு மரணம் வந்துவிடுமானால், நம் அமரர்கள் அவர் ஆத்மாவை எடுத்துக் கொள்கிறார்கள் - அவர்கள் (தம் கடமையில்) தவறுவதில்லை.
Jan Trust Foundation - Tamil translation
அவன்தான் தன் அடியார்கள் மேல் ஆதிக்கமுள்ளவன். உங்கள் மீது (வானவ) காவலர்களையும் அனுப்புகிறான். இறுதியாக, உங்களில் ஒருவருக்கு மரணம் வந்தால், நம் (வானவத்) தூதர்கள் அவரை (அவருடைய உயிரை) கைப்பற்றுகின்றனர். அவர்கள் (தங்கள் பணியில்) குறைவு செய்யமாட்டார்கள்.
الترجمة التاميلية - عمر شريف