10. அதில் அவர்கள் (நுழைந்ததும்) ‘‘எங்கள் இறைவனே! நீ மிகப் பரிசுத்தமானவன்; (நீ மிகப் பரிசுத்தமானவன்)'' என்று கூறுவார்கள். அதில் (தங்கள் தோழர்களைச் சந்திக்கும்போதெல்லாம்) ‘‘ஸலாமுன் (அலைக்கும்)'' என்று முகமன் கூறுவார்கள். முடிவில் ‘‘புகழனைத்தும் அகிலங்கள் அனைத்தையும் படைத்து வளர்த்து பரிபாலிக்கின்றவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமானது'' என்று புகழ்ந்து துதி செய்து கொண்டிருப்பார்கள்.
الترجمة التاميلية
دَعۡوَىٰهُمۡ فِيهَا سُبۡحَٰنَكَ ٱللَّهُمَّ وَتَحِيَّتُهُمۡ فِيهَا سَلَٰمٞۚ وَءَاخِرُ دَعۡوَىٰهُمۡ أَنِ ٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ
அதில் அவர்கள்; "(எங்கள்) அல்லாஹ்வே! நீ மகா பரிசத்தமானவன்" என்று கூறுவார்கள்; அதில் (தம் தோழர்களைச் சந்திக்கும் போது) அவர்களின் முகமன் ஸலாமுன் என்பதாகும். "எல்லாப் புகழும் அகிலங்கள் அனைத்துக்கும் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே" என்பது அவர்களது பிரார்த்தனையின் முடிவாகும் இருக்கும்.
Jan Trust Foundation - Tamil translation
அதில் அவர்களின் பிரார்த்தனை, “அல்லாஹ்வே! நீ மிகப் பரிசுத்தமானவன்” என்பதாகும். அதில் அவர்களின் முகமன் “ஸலாம்” ஆகும். அவர்களுடைய பிரார்த்தனையின் இறுதி “நிச்சயமாக புகழ் (அனைத்தும்) அகிலங்களின் இறைவன் அல்லாஹ்வுக்கே சொந்தமானது”என்று இருக்கும்.
الترجمة التاميلية - عمر شريف