72. பின்னும் நீங்கள் (என்னைப்) புறக்கணித்(து நிராகரித்)தால் (அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஏனென்றால்,) நான் உங்களிடத்தில் ஒரு கூலியும் எதிர்பார்க்கவில்லை; என் கூலி அல்லாஹ்விடமே தவிர (மற்றெவரிடமும்) இல்லை. நான் அவனுக்கு முற்றிலும் பணிந்து வழிப்பட்டு நடக்கும்படியாகவே கட்டளையிடப் பட்டுள்ளேன்'' (என்று கூறினார்.)
الترجمة التاميلية
فَإِن تَوَلَّيۡتُمۡ فَمَا سَأَلۡتُكُم مِّنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَى ٱللَّهِۖ وَأُمِرۡتُ أَنۡ أَكُونَ مِنَ ٱلۡمُسۡلِمِينَ
"ஆனால், நிங்கள் (என் உபதேசத்தைப்) புறக்கணித்து விட்டால், (எனக்கு எவ்வித இழப்புமில்லை.) ஏனெனில் (இதற்காக) நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை; எனக்குரிய கூலி அல்லாஹ்விடமேயன்றி (வேறெவரிடத்தும்) இல்லை. நான் அவனுக்கு (முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லீம்களில் (ஒருவனாக) இருக்குமாறே நான் ஏவப்பட்டுள்ளேன்" (என்று கூறினார்0.
Jan Trust Foundation - Tamil translation
நீங்கள் (புறக்கணித்து) திரும்பினால், (எனக்கு கவலையில்லை. ஏனெனில்,) நான் உங்களிடம் எந்த கூலியையும் கேட்கவில்லை; என் கூலி அல்லாஹ்வின் மீதே தவிர (மற்றவர் மீது) இல்லை. முஸ்லிம்களில் நான் ஆகவேண்டுமென கட்டளையிடப்பட்டுள்ளேன்”(என்று கூறினார்).
الترجمة التاميلية - عمر شريف