28. ‘‘(அவ்வூரில் உள்ள ஊற்றின்) குடிநீர் அவர்களுக்கு(ம் அந்த ஒட்டகத்திற்கும்) இடையில் நிச்சயமாகப் பங்கிடப்பட்டுவிட்டது. ஒவ்வொருவரும் தன் பங்கிற்குத் தகுந்தாற்போல் குடிப்பதற்கு வரலாம்'' என்று அவர்களுக்கு அறிவித்து விடுவீராக.
الترجمة التاميلية
وَنَبِّئۡهُمۡ أَنَّ ٱلۡمَآءَ قِسۡمَةُۢ بَيۡنَهُمۡۖ كُلُّ شِرۡبٖ مُّحۡتَضَرٞ
(அவ்வூரிலுள்ள கிணற்றின்) தண்ணீர் அவர்களுக்கு(ம் அந்த ஒட்டகத்திற்கும்) இடையில் பங்கிடப்பட்டுள்ளது, "ஒவ்வொருவரும் (தண்ணீர்) முறைப்படி குடிப்பதற்கு வரலாம்" என்று அவர்களுக்கு அறிவித்து விடும்.
Jan Trust Foundation - Tamil translation
நிச்சயமாக தண்ணீர் (ஒட்டகம் நீர் குடிக்காத நாளில்) அவர்களுக்கு மத்தியில் (சமமான) பங்காகும் என்று அவர்களுக்கு அறிவிப்பீராக! தண்ணீர் குடிக்கப்படுகின்ற எல்லா நேரங்களிலும் (அந்த அந்த நேரத்திற்குரியவர்கள்) ஆஜராக வேண்டும்.
الترجمة التاميلية - عمر شريف