131. (நபியே!) இ(வ்வாறு நபிமார்களை அனுப்புவ)தன் காரணமெல்லாம் அநியாயம் செய்த எவ்வூராரையும் அவர்கள் அஜாக்கிரதையாக இருக்கும் சமயத்தில் (எச்சரிக்கை செய்யாமல்) அவர்களை அழிப்பவனாக உமது இறைவன் இருக்கவில்லை என்பதுதான்.
الترجمة التاميلية
ذَٰلِكَ أَن لَّمۡ يَكُن رَّبُّكَ مُهۡلِكَ ٱلۡقُرَىٰ بِظُلۡمٖ وَأَهۡلُهَا غَٰفِلُونَ
(இவ்வாறு தூதர்களை அவன் அனுப்பியதற்குக்) காரணம் யாதெனில், அநியாயம் செய்பவர்களின் ஊரை, அதிலிருப்போர் எச்சரிக்கை இல்லாதிருக்கும் நிலையில் அவர்கள் செய்துவிட்ட அநியாயத்தின் காரணமாக உம் இறைவன் அழிப்பதில்லை என்பதேயாகும்.
Jan Trust Foundation - Tamil translation
அதற்குக் காரணம், நகரங்களை அங்கு வசிப்பவர்கள் கவனமற்றவர்களாக இருக்க (அவர்களுடைய ஷிர்க் எனும்) அநியாயத்தினால் அழிப்பவனாக உமது இறைவன் இல்லை என்பதாகும்.
الترجمة التاميلية - عمر شريف