133. (நபியே!) உமது இறைவன் தேவையற்றவன், அன்புடையவன். (மனிதர்களே!) அவன் விரும்பினால் உங்களைப் போக்கி, தான் நாடிய எவரையும் உங்கள் இடத்தில் அமர்த்தி விடுவான். இவ்வாறே (சென்று போன) மற்ற மக்களின் சந்ததிகளிலிருந்து உங்களை உற்பத்தி செய்திருக்கிறான்.
الترجمة التاميلية
وَرَبُّكَ ٱلۡغَنِيُّ ذُو ٱلرَّحۡمَةِۚ إِن يَشَأۡ يُذۡهِبۡكُمۡ وَيَسۡتَخۡلِفۡ مِنۢ بَعۡدِكُم مَّا يَشَآءُ كَمَآ أَنشَأَكُم مِّن ذُرِّيَّةِ قَوۡمٍ ءَاخَرِينَ
உம் இறைவன் தேவைகளற்றவன்; மிக்க கருணையுடையவன் - அவன் நாடினால் உங்களைபோக்கி உங்களுக்கு பிறகு, உங்களை அவன் இதர மக்களின் சந்ததியிலிருந்து உற்பத்தி செய்தது போன்றே - தான் நாடியவரை உங்களுக்கு பதிலாக ஆக்கி விடுவான்.
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) உம் இறைவன் நிறைவானவன், கருணையுடையவன் ஆவான். (மனிதர்களே!) அவன் நாடினால் உங்களைப் போக்கி, (சென்றுபோன) மற்ற சமுதாயத்தின் சந்ததியிலிருந்து உங்களை உருவாக்கியதைப் போன்று உங்களுக்குப் பின்னர் தான் நாடியவர்களை தோன்றச் செய்வான்.
الترجمة التاميلية - عمر شريف