159. எவர்கள் தங்கள் மார்க்கத்தை (தங்கள் இஷ்டப்படி பலவாறாக)ப் பிரித்து (அவர்களும்) பல பிரிவினராகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் உங்களுக்கு ஒரு சம்பந்தமும் இல்லை. அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே இருக்கிறது. அவர்கள் செய்து கொண்டிருந்த (இத்தீய)வற்றைப் பற்றி பின்னர் அவன் அவர்களுக்கு அறிவித்துவிடுவான்.
الترجمة التاميلية
إِنَّ ٱلَّذِينَ فَرَّقُواْ دِينَهُمۡ وَكَانُواْ شِيَعٗا لَّسۡتَ مِنۡهُمۡ فِي شَيۡءٍۚ إِنَّمَآ أَمۡرُهُمۡ إِلَى ٱللَّهِ ثُمَّ يُنَبِّئُهُم بِمَا كَانُواْ يَفۡعَلُونَ
நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது - அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்.
Jan Trust Foundation - Tamil translation
நிச்சயமாக, தங்கள் மார்க்கத்தை (பலவாறாக)ப் பிரித்து (அவர்களும்) பல பிரிவினர்களாக ஆகிவிட்டார்களே அவர்களுடன் நீர் ஒரு விஷயத்திலும் இல்லை. அவர்களுடைய காரியமெல்லாம் அல்லாஹ்வின் பக்கம்தான் இருக்கிறது. பிறகு, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை அவன் அவர்களுக்கு அறிவிப்பான்.
الترجمة التاميلية - عمر شريف