47. (நபியே! அவர்களை நோக்கி) கேட்பீராக: ‘‘திடீரெனவோ அல்லது முன்னெச்சரிக் கையுடனோ அல்லாஹ்வுடைய வேதனை உங்களிடம் வந்து விட்டால் (என்னாகும் என்பதை) நீங்கள் சிந்தித்தீர்களா? (அந்நேரத்தில் இந்த) அநியாயக்கார மக்களைத் தவிர (மற்றெவரும்) அழிக்கப்படுவார்களா?''
الترجمة التاميلية
قُلۡ أَرَءَيۡتَكُمۡ إِنۡ أَتَىٰكُمۡ عَذَابُ ٱللَّهِ بَغۡتَةً أَوۡ جَهۡرَةً هَلۡ يُهۡلَكُ إِلَّا ٱلۡقَوۡمُ ٱلظَّـٰلِمُونَ
"திடீரென்றோ, அல்லது முன் எச்சரிக்கையாகவோ அல்லாஹ்வின் வேதனை உங்களிடம் வந்து விட்டால் (என்ன நிலை ஏற்படும் என்பதை நீங்கள் சிந்தித்தீர்களா?) அச்சமயம் அக்கிரமக்காரர்கள் தவிர வேறு யாரும் அழிக்கப்படுவார்களா? என்று (நபியே!) நீர் கேளும்.
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) கூறுவீராக: "திடீரென அல்லது வெளிப்படையாக அல்லாஹ்வின் வேதனை உங்களுக்கு வந்தால் அநியாயக்கார மக்களைத் தவிர (மற்றவர்கள்) அழிக்கப்படுவார்களா? என்று (எனக்கு) அறிவியுங்கள்!''
الترجمة التاميلية - عمر شريف