50. (நபியே! நீர் அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்வுடைய பொக்கிஷங்கள் என்னிடம் இருக்கிறதென்று நான் உங்களுக்குக் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியவும் மாட்டேன். உண்மையாகவே நான் ஒரு வானவர் என்று நான் உங்களிடம் கூறவில்லை. எனினும், எனக்கு வஹ்யின் மூலம் அறிவிக்கப்பட்டவற்றைத் தவிர (வேறொன்றையும்) நான் பின்பற்றுவது இல்லை'' என்று கூறி, ‘‘குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? (இவ்வளவு கூட) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?'' என்றும் கேட்பீராக.
الترجمة التاميلية
قُل لَّآ أَقُولُ لَكُمۡ عِندِي خَزَآئِنُ ٱللَّهِ وَلَآ أَعۡلَمُ ٱلۡغَيۡبَ وَلَآ أَقُولُ لَكُمۡ إِنِّي مَلَكٌۖ إِنۡ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَىٰٓ إِلَيَّۚ قُلۡ هَلۡ يَسۡتَوِي ٱلۡأَعۡمَىٰ وَٱلۡبَصِيرُۚ أَفَلَا تَتَفَكَّرُونَ
(நபியே!) நீர் கூறும்; "என்னிடத்தில் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன என்று நான் உங்களிடம் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியமாட்டேன்; நிச்சயமாக நான் ஒரு மலக்காக இருக்கின்றேன் என்றும் நான் உங்களிடம் சொல்லவில்லை எனக்கு (வஹீயாக) அறிவிக்கப்பட்டதைத் தவிர (வேறு எதையும்) நான் பின்பற்றவில்லை." இன்னும் நீர் கூறும்; "குருடனும் பார்வையுடைவனும் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?"
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) கூறுவீராக: "அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் என்னிடம் உள்ளன என்று நான் உங்களுக்குக் கூறமாட்டேன். மறைவானவற்றை நான் அறிய மாட்டேன். நிச்சயமாக நான் ஒரு வானவர் என்றும் உங்களுக்கு கூறமாட்டேன். எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறு எதையும்) நான் பின்பற்றமாட்டேன்.'' (நபியே!) கூறுவீராக: "குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?''
الترجمة التاميلية - عمر شريف