51. (நபியே!) எவர்கள், ‘‘(மறுமையில்) தங்கள் இறைவனிடம் (விசாரணைக்காகக்) கொண்டு போகப்படுவோம், அங்கு அவனைத் தவிர தங்களுக்கு பாதுகாவலரோ பரிந்துரை செய்பவரோ இருக்கமாட்டார்'' என்று பயப்படுகிறார்களோ அவர்களை இதன் மூலம் நீர் எச்சரிப்பீராக. அவர்கள் (பாவத்திலிருந்து விலகி) இறைவனை அஞ்சிக்கொள்வார்கள்.
الترجمة التاميلية
وَأَنذِرۡ بِهِ ٱلَّذِينَ يَخَافُونَ أَن يُحۡشَرُوٓاْ إِلَىٰ رَبِّهِمۡ لَيۡسَ لَهُم مِّن دُونِهِۦ وَلِيّٞ وَلَا شَفِيعٞ لَّعَلَّهُمۡ يَتَّقُونَ
இன்னும் எவர் தங்கள் இறைவன் முன் (மறுமையில்) கொண்டு வரப்படுவது பற்றி பயப்படுகிறார்களோ அவர்களுக்கு (இவ்வேதத்தைக் கொண்டு) எச்சரிக்கை செய்யும் - (பாவத்திலிருந்து நீங்கி) அவர்கள் பயபக்தியுடையோராகும் பொருட்டு; அவனைத் தவிர அவர்களுக்குப் பாதுகாப்பளிப்பவரோ, பரிந்து பேசுபவரோ வேறு யாரும் இல்லை.
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) “(மறுமையில்) தங்கள் இறைவனிடம் ஒன்று திரட்டப்படுவோம், அங்கு தங்களுக்கு அவனைத் தவிர பாதுகாவலரும் இல்லை பரிந்துரைப்பவரும் இல்லை'' என்று பயப்படுபவர்களை இதன் மூலம் எச்சரிப்பீராக! அவர்கள் (அதிகமதிகம்) அல்லாஹ்வை அஞ்சுவதற்காக(வும் பாவங்களை விட்டு விலகிக் கொள்வதற்காகவும்).
الترجمة التاميلية - عمر شريف