8. (‘‘இவர் உண்மையான தூதர்தான் என்று சாட்சி சொல்வதற்கு) அவருக்காக ஒரு வானவர் அனுப்பப்பட வேண்டாமா?'' என்று அவர்கள் கூறுகின்றனர். (அவர்கள் விரும்புகிறபடி) நாம் ஒரு வானவரை அனுப்பி வைத்திருந்தால், (அவர்களின்) காரியம் முடிவு பெற்றிருக்கும். பிறகு, (அதில்) அவர்களுக்கு அவகாசம் கிடைத்திருக்காது. (உடனே அவர்கள் அழிந்திருப்பார்கள்.)
الترجمة التاميلية
وَقَالُواْ لَوۡلَآ أُنزِلَ عَلَيۡهِ مَلَكٞۖ وَلَوۡ أَنزَلۡنَا مَلَكٗا لَّقُضِيَ ٱلۡأَمۡرُ ثُمَّ لَا يُنظَرُونَ
(இவர் உண்மையான தூதர் என்று சாட்சி கூற) இவர் மீது ஒரு மலக்கு இறக்கப்பட வேண்டாமா? என அவர்கள் கூறுகின்றனர்; (அவ்வாறு) நாம் ஒரு மலக்கை இறக்கி வைப்போமானால் (அவர்களுடைய) காரியம் முடிக்கப்பட்டிருக்கும்; பிறகு அவர்களுக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்கப்படமாட்டாது.
Jan Trust Foundation - Tamil translation
அவர் மீது ஒரு வானவர் இறக்கப்பட வேண்டாமா?” என்றும் கூறினர். நாம் ஒரு வானவரை இறக்கினால் (அவர்களது) காரியம் முடிக்கப்பட்டுவிடும். பிறகு, அவகாசம் அளிக்கப்படமாட்டார்கள்.
الترجمة التاميلية - عمر شريف